பெண்ணுறுப்பில் ஏற்படும் தொற்றால் இல்லற வாழ்க்கையே பாதிக்கலாம்..! சிகிச்சை அவசியம்..!

பெண்ணுறுப்பில் ஏற்படும் தொற்றால் இல்லற வாழ்க்கையே பாதிக்கலாம்..! சிகிச்சை அவசியம்..!
X

பூஞ்சைத் தொற்றினால் ஏற்படும் வலி.-கோப்பு படம் 

பெண்கள் தங்களது அந்தரங்க உறுப்பில் ஏற்படும் தொற்றுகளுக்கு மருத்துவ சிகிச்சை எடுப்பது அவசியம். அலட்சியப்படுத்தக்கூடாது.

பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனில் அக்கறை கொள்வது அவசியம். குறிப்பாக ஆண்களைவிட பெண்கள் உணர்ச்சி ரீதியில் இலகுவாக பாதிக்கப்படக்கூடியவர்கள். ஆண்களைப் போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். உடல் ஆரோக்யம் மட்டுமே மன ரீதியிலான ஆரோக்யத்தை கொண்டுவரும்.

பாதுகாப்பான மற்றும் திருப்தியான பாலியல் வாழ்க்கை மட்டுமே கணவன் மனைவிக்கு இடையே ஒரு நெருக்கத்தை அந்நியோன்யத்தை உருவாக்கும். அதற்கு இனப்பெருக்க நலன் மிகவும் முக்கியமாகும். பல பெண்களுக்கு தங்களின் பாலியல் ரீதியான ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை. படித்தவர்கள் கூட சில அடிப்படை விஷயங்களைக்கூட அறியாமல்தான் உள்ளனர். பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் சில அடிப்படை பிரச்னைகள் குறித்து அறியலாம் வாங்க.

பூஞ்சைத் தொற்று

பூஞ்சைத் தொற்று என்பது பெண்களுக்கு உண்டாகும் ஒரு பொதுவான குறைபாடாகும். இது சிறிய எண்ணிக்கைகளில் பெண்களின் பிறப்புறுப்பில் வாழும் ஒரு பூஞ்சையாகும். இவை சிறிய எண்ணிக்கையில் இருந்தாலும் வேகமாக பரவும் தன்மையுடையது. அதனால் கேண்டிடா ஆல்பிகன்ஸ் என்ற பூஞ்சை நோய் ஏற்படும் ஆபத்துகூட ஏற்படலாம்.

அறிகுறிகள்

பெண் உறுப்பில் எரிச்சல், புண் மற்றும் அந்தரங்க உறுப்பு சிவத்தல் அல்லது வீக்கமடைதல் போன்றவை இதன் அறிகுறிகளாகத் தென்படும்.

நன்றாக புரிந்துகொள்ளுங்கள் இதைப் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவைகளை அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். சிறு வயது பெண் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய தொற்று பிரச்னை ஆகும்.

பெண்ணுறுப்பில் ஏற்படும் வலி :

பல பெண்கள் பெண்ணுறுப்பில் ஏற்படும் வலிக்கு மாதவிடாய் அல்லது வெள்ளைப்படுதல் மட்டுமே காரணம் என்று எண்ணுகின்றனர்.இந்த வலி ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து பெரும்பாலான பெண்கள் கவலைப்படுவதில்லை. மருத்துவரிடம் இது குறித்து ஆலோசனை கேட்பதும் இல்லை.

பெண்ணுறுப்பில் வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. பூஞ்சைத் தொற்று ஏற்பட்டிருப்பதால் கூட பெண்ணுறுப்பில் வலி ஏற்படலாம்.

எனவே,பெண்ணுறுப்பில் வலி ஏற்படும் போது அது மாதவிடாய் காரணமாக மட்டும் ஏற்படுவது என்று என தவறாக எண்ணி பெரிய பிரச்னையில் சிக்கிக்கொள்ளவேண்டாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதற்கு தகுந்த மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து அதற்கு சிகிச்சை பெறுவது ஒன்றே நிறைந்தர தீர்வாகும்.


பெண்ணுறுப்பில் வலி ஏற்படுவதற்கான வேறு காரணங்கள்

ஹெர்பெஸ் (Herpes)

ஹெர்பெஸ் என்பது ஒரு பால்வினைத் தொற்று (STI) ஆகும். இந்த தொற்று ஏற்பட்டால் பெண்களின் பிறப்புறுப்பில் கொப்பளங்கள் ஏற்படும். அதனால் பெண்ணுறுப்பில் வலி இருந்துகொண்டே இருக்கும். எனவே, அவ்வாறு பெண்களுக்கு பெண்ணுறுப்பில் வலி ஏற்படும் போது மிகவும் எச்சரிக்கையாக மருத்துவரிடம் சென்று அவரது ஆலோசனைப்பெற்று சிகிச்சை பெறவேண்டும்.

பூஞ்சைத் தொற்று எற்படுவதற்கான காரணங்கள்:

  • பூஞ்சைத் தொற்று ஈஸ்ட் தொற்று என்றும் கூறப்படும். இந்த தொற்று எந்த பெண்ணுக்கும் வரலாம். அதனால் பெண்ணுறுப்பில் வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்தித்து அந்த வலி எதனால் ஏற்படும் வலி என்பதை கண்டறிந்து அதற்கு சிகிச்சை பெருவடகு முக்கியமாகும்.
  • கெமிக்கல் கலந்த பெர்ஃப்யூம் பயன்படுத்துவது, அந்தரங்க உறுப்புகளுக்கான வாசனை ஸ்பிரே அடிப்பவர்கள், சோப்பு, வெஜைனல் வாஷ் போன்ற பொருட்களை பயன்படுத்துகிறவர்களுக்கும் எளிதில் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் குளிப்பதற்கு பாத்டப் பயன்படுத்துவோருக்கு இந்த பூஞ்சைத் தொற்று ஏற்படும்.
  • தாம்பத்திய உறவுக்கு முன்னும் உறவுக்குப் பின்னும், கருத்தரிப்பைத் தவிர்ப்பதற்காக விந்தணுக் கொல்லி உபயோகிக்கும் பெண்களுக்கும் பூஞ்சைத் தொற்று எளிதில் வரலாம். பெண்களுக்கு மலத் துவாரமும் சிறுநீர்த் துவாரமும் மிக அருகருகே இருப்பதால், சரியாக கழுவாமல் அல்லது சுத்தம் செய்யாமல் இருந்தால் கிருமித் தொற்று இலகுவாகப் பரவும்.
  • மாதவிடாய் நிற்கும் காலமான மெனோபாஸ் காலத்தில், பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் ஹார்மோன் மாற்றங்களால் கூட இது ஏற்படலாம். மாதவிடாய் முற்றுப் பெற்றதும், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறையும். இந்த ஹார்மோன்தான் அந்தரங்க உறுப்புக்கு வழுவழுப்புத் தன்மையைக் கொடுக்கக் கூடியது.

அது குறைகிற போது உறுப்பில் வறட்சி ஏற்பட்டு அரிப்பும் எரிச்சலும் ஏற்படுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு மாதத்தின் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் அந்தரங்க உறுப்பில் அரிப்பும் எரிச்சலும் இருக்கும். இதற்குக் காரணம் அவர்களது உடலில் நிகழ்கிற பி.ஹெச். அளவு மாற்றங்கள். கருத்தரிக்கும் நேரத்தில் விந்தணுக்களை அனுமதிக்க ஏதுவாக பெண்ணின் உடலில் காரத்தன்மை அதிகமாக இருக்கும்.

கருத்தரித்து விட்டால், அது அமிலத்தன்மை கொண்டதாக மாறிவிடும். அப்போதுதான் மேற்கொண்டு கருத்தரிப்பதோ, ஏற்கனவே தரித்த கரு பாதிக்கப்படாமலோ இருக்கும். இந்த நேரத்திலும் பெண்ணின் உடலில் கிருமித் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

  • தாம்பத்திய உறவுக்குப் பின்னர் பரவும் கிருமித் தொற்று என்பது மிகவும் சாதரணமானது. அதிக இறுக்கமான, வியர்வையை உறிஞ்சாத உள்ளாடை அணியும் பெண்களுக்கும் இந்த பூஞ்சைத் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
  • பூப்பெய்வதற்கு முன்பு சில சிறுமிகளுக்கு இந்த தொற்று வரலாம். ஏனெனில் சிறுவயதில் சிறுமிகள் பெண்ணுறுப்பை முறையாக சுகாதாரமாக கழுவி சுத்தமாக வைக்காமல் இருப்பதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அதேபோல பலர் பயன்படுத்தும் கழிவறை பயன்பாடு உள்ளவர்களுக்கு இந்த தொற்று இலகுவாக தாக்கும் அபாயம் உள்ளது. தண்ணீர் பயன்படுத்தாமல் டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துவதால் முழுமையான சுத்தம் ஏற்படாது. அதன் விளைவாக கிருமித் தொற்று சுலபமாக ஏற்படும்.
  • பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் சிறுமிகளுக்கும் இந்தப் பிரச்னை பரவலாகக் காணப்படும். நடுத்தர வயதில் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டால் நீரிழிவு பாதிப்பின் அறிகுறியாகவோ அல்லது தைராய்டு பிரானையாகவோ கூட இருக்கலாம்.

பொதுவான அறிகுறிகள் :

  • அரிப்பு, எரிச்சல் போன்றவற்றுடன் வெள்ளைப் போக்கும் இருக்கும்.
  • பெண் உறுப்பில் சிறுநீரோ, தண்ணீரோ பட்டால் எரிச்சல் உண்டாகும்.
  • கிருமியின் தாக்குதல், அதன் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்து வெள்ளைப் போக்கின் தன்மையும் வேறுபடும்.
  • சிலருக்கு நீர்த்த போக்கு இருக்கும். சிலருக்கு திரிந்த தயிர் போன்று இருக்கும்.
  • கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தால் கெட்ட வாடை வீசும்.
  • காய்ச்சல், குளிர் காய்ச்சல் போன்றவையும் ஏற்படலாம்.

மருத்துவ சோதனைகள்:

மருத்துவரிடம் ஆலோசனை செய்து தேவைப்பட்டால் மருத்துவர் வெள்ளைப் போக்குக்கான காரணத்தைக் கண்டறிய சோதனைக்கு அனுப்புவார். எந்த வகையான கிருமி தாக்கியிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தால் மட்டுமே அதற்கேற்ப மருத்துவர் மருந்து பரிந்துரைக்க முடியும்.

சருமப் பிரச்னை என்றால் அதற்கான தீர்வுகள், வெளிப்பூச்சுக்கான மருந்துகள் போன்றவை பலன் தரும்.

எப்படித் தவிர்க்கலாம் ?

  • தளர்வான, காட்டன் உள்ளாடைகள் அணிய வேண்டும்.
  • டியடோரன்ட், ஸ்பிரே போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும்.
  • கழிப்பறை செல்லும் போது முறையாக சுத்தப்படுத்த சிறு வயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும்.
  • மெனோபாஸ் வயதுப் பெண்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் தேவையென்றால் ஈஸ்ட்ரோஜென் க்ரீம் எடுத்துக் கொள்ளலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!