படர் தாமரைக்கு எளிய வீட்டு வைத்தியம்..! எதனால் வருது..?

படர் தாமரைக்கு எளிய வீட்டு வைத்தியம்..! எதனால் வருது..?
X

படர்தாமரை -கோப்பு படம் 

அதிகமாக வியர்ப்பது, ஈரமான துணிகளை அணிவது கூட படர்தாமரை வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கின்றன. எப்படி தடுக்கலாம்? தெரிஞ்சுக்குவோமா..?

படர்தாமரை, என்பது மருத்துவ ரீதியாக டெர்மடோஃபைடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு பூஞ்சைத் தொற்று ஆகும். இது தோலின் மேற்புறத்தில் அல்லது உச்சந்தலையில் ஏற்படுகிறது. மேலும் தோலில் இருந்து தோல் தொடர்பு மூலம் பிறருக்கும் பரவுகிறது. இது மிகவும் பொதுவான தொற்று ஆகும். ஆனால் மிக எளிதாக பிறருக்கு பரவக்கூடியது.

படர்தாமரை எதனால் வருகிறது?

படர்தாமரை என்பது ஒரு தொற்றக்கூடிய பூஞ்சை நோய்த்தொற்று ஆகும், அதன் பெயர் என்னவாக இருந்தாலும், அது பூச்சிகளால் ஏற்படாது. இது டினியா என்ற பூஞ்சையால் உருவாகிறது.

படர்தாமரையின் அறிகுறிகள் யாவை?

உடலின் எந்தப் பகுதியிலும் படர்தாமரை தோன்றக்கூடும் என்பதால், எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

  • அரிப்பு
  • மோதிர வடிவ அரிப்புத் தழும்பு (அதாவது வட்ட வடிவில்)
  • சிவத்தல்
  • செதில் மற்றும் வெடிப்பு தோல்
  • முடி உதிர்தல்

படர்தாமரையின் ஆபத்து காரணிகள் யாவை?

  • நீங்கள் பின்வரும் சந்தர்ப்பங்களில் படர்தாமரை நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்:
  • ஒரு சூடான தட்பவெப்பநிலை கொண்ட இடத்தில் வாழும் போது.
  • பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு இருந்தால்.
  • நெருங்கிய தொடர்பு விளையாட்டுகளில் (மல்யுத்தம் போன்றவை) பங்கேற்கும் போது.
  • தனிப்பட்ட பொருட்களை பலருடன் பகிர்ந்து கொள்ளும் போது.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

இரண்டு வாரங்களுக்குள் உங்கள் அறிகுறிகள் மாறவில்லை அல்லது சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை என்றால் நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்தால் உங்கள் மூலமாக மாணவர்களுக்கும் பரவும் என்பதால் உடனடியாக மருத்துவரை சந்திக்கவேண்டும். மருத்துவரிடம் ஆலோசனைப்பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.

சில சந்தர்ப்பங்களில், படர்தாமரை வீட்டு வைத்தியம் அல்லது OTC சிகிச்சைகளில் சரியாகாது. அதனால் உங்கள் மருத்துவர் பூஞ்சைக் காளான் தொற்றுக்கு உதவும் வகையிலான மேற்பூச்சு களிம்பு அல்லது வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் மருந்தை பரிந்துரைக்கலாம்.

படர்தாமரை சிகிச்சைக்கான பயனுள்ள வீட்டு வைத்தியம்

படர்தாமரை தொற்றுக்கு பாதுகாப்புக்கான வீட்டு வைத்தியம் உள்ளன.சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் கீழே தரப்பட்டுள்ளன:


1. ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு சிறந்த பூஞ்சை காளான் பொருளாக அறியப்படுகிறது. படர்தாமரை சிகிச்சைக்கு இதை பயன்படுத்தலாம். சிறிதளவு பஞ்சு எடுத்து அதில் ஆப்பிள் சைடர் வினிகரில் நனைத்து, பூஞ்சைத்தொற்று ஏற்பட்ட பகுதியில் நன்றாக துடைக்கவும். ஒவ்வொரு நாளும் இதை மூன்று முறை செய்யவும். இந்த ஆப்பிள் சைடர் வினிகர் பட்டு பூஞ்சைகள் காயத் தொடங்கும்.


2. கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன..அது படர்தாமரை சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை ஜெல் திறமையாக பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டிருக்கிறது. கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு நாளைக்கு மூன்று முறை தடவவும். கூடுதலாக, கற்றாழையின் குளிர்ச்சியான பண்புகள் காரணமாக, இது அரிப்பு மற்றும் வீக்கத்தைப் போக்க உதவுகிறது.


3. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் சில கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை பூஞ்சை செல்களின் ஜவ்வுகளை சேதப்படுத்துகின்றன. இது பாக்டீரியாக்களின் உடனடி மரணத்திற்கு வழிவகுக்கும். தேங்காய் எண்ணெய் சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகிய இரண்டிலும் பயன்படுத்தப்படலாம்.

உங்களுக்கு படர்தாமரை புண் இருந்தால், தேங்காய் எண்ணெயை படர்தாமரை உள்ள இடத்தில் தடவுவதன் மூலம் நிவாரணம் பெறலாம். உங்கள் தோல் பராமரிப்பு அல்லது முடி பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினால், எதிர்காலத்தில் பூஞ்சை தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.


4. மஞ்சள்

பாரம்பரியமாக இந்திய வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று மஞ்சள். மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது, இது ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது, மேலும் அதன் அழற்சி எதிர்ப்பு திறன்கள் படர்தாமரையின் அறிகுறிகளைப் போக்க உதவுகின்றன.

இந்த நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க, நீங்கள் மஞ்சளை மேற்பூச்சு பயன்பாடாகவோ அல்லது வாய்வழி மருந்துப்பொருளாகவோ பயன்படுத்தலாம். இதை உட்கொள்வதன் மூலம் நன்மைகளைப் பெற தேநீர், பால் அல்லது உணவில் மஞ்சளைச் சேர்த்து உட்கொள்ளலாம்.

இதை வெளிப்புற பயன்பாடாகப் பயன்படுத்த, ஒரு தேக்கரண்டி மஞ்சளை தண்ணீர் அல்லது எண்ணெயுடன் கலந்து, அந்த பேஸ்ட்டைப் பாதிக்கப்பட்ட பகுதி மீது பூசுங்கள். அது முற்றிலும் காய்ந்த பிறகு, அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும், பின்னர் அந்த இடத்தை நன்றாக காயவிடுங்கள்.


5. அதிமதுரம் வேர்

லைகோரைஸ் ரூட் எனப்படும் அதிமதுரம் வேர் பாரம்பரிய சீன மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது.

படர்தாமரை தொற்றுகளுக்கு அதிமதுரம் வேரின் பொடியை பயன்படுத்தி திறம்பட சிகிச்சையளிக்க முடியும். மூன்று தேக்கரண்டி அதிமதுர வேரின் பொடியை தண்ணீரில் கலந்து,அந்த கரைசலை கொதிக்க வைக்கவும். குறைந்த அனலில் சுமார் பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பேஸ்ட் ஆகும் வரை ஆறவிடவும். இந்த கலவையை ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்ட பகுதியில் பூசவும்.


6. தேயிலை மர எண்ணெய்

தேயிலை மர எண்ணெய் என்பது பூர்வீக ஆஸ்திரேலியர்களால் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான தீர்வாகும், குறிப்பாக பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு. பன்னிரண்டு சொட்டு தேயிலை மர எண்ணெயில் ஒரு அவுன்ஸ் குளிர்ந்த அழுத்தப்பட்ட கேரியர் எண்ணெயுடன் கலந்து 2சதவீத நீர்த்தலைத் தயாரிக்கவும்.(அதாவது ஆவியாக்கி வடிகட்டல்) இந்த கலவையை உங்கள் சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு நாளைக்கு மூன்று முறை தடவவும்.


7. ஆர்கனோ எண்ணெய்

ஆர்கனோ எண்ணெயில் தைமால் மற்றும் கார்வாக்ரோல் உள்ளது. இந்த இரண்டு சேர்மங்களும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. படர்தாமரை சிகிச்சையில் ஆர்கனோ எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த எண்ணெயை கேரியர் எண்ணெயுடன் கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். அதிகபட்ச பலன்களைப் பெற தினமும் மூன்று முறை இதைச் செய்யுங்கள். (ஆர்கன் என்பது மொரோக்காவில் உள்ள ஒரு வகை மரம். ஆர்கன் மரத்தின் காய்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆர்கன் எண்ணெய் ஆகும்)

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings