உடலின் தேவையற்ற கொழுப்பை கரைக்கனுமா?
அறுகம்புல் பொடி, கஸ்தூரி மஞ்சள் தூள், பச்சை பயிறு மூன்றும் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். கலந்து வைத்த பொடி கொண்டு குளித்து வருவதன் மூலமாக உடல் உஷ்ணம், சொறி, சிரங்கு, அலர்ஜி, அரிப்பு, அனைத்தும் சரியாகும்.
அறுகம்புல் பொடியைக் காலை மாலை சாப்பிடுவதன் மூலமாக உடலில் உள்ள தேவையற்ற நீர், தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும். கை கால் வீக்கத்திற்கும், அருகம் புல் சாப்பிடச் சரியாகும்.
கபத்தைத் தடுக்க அறுகம்புல் பொடி தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். கபம் வாதம் பித்தம் இவை மூன்றையும் சமன் செய்வதற்கு உதவுகிறது. வாதத்திற்கு அறுகம்புல் பொடி உடன் மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிட வேண்டும். பித்தத்திற்கு அறுகம்புல் பொடியுடன் இஞ்சி சேர்த்துச் சாப்பிட வேண்டும். கபத்திற்கு அறுகம்புல் பொடி உடன் திப்பிலி பொடியுடன் சாப்பிட வேண்டும்.
சொறி, சிரங்கு, படை, பூச்சிக்கடி, தேள், பூரான் கடிக்கு, ஐம்பது கிராம் அறுகம்புல், ஐம்பது கிராம் குப்பைமேனி பொடி செய்து கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். காலை, மாலை சாப்பிட்டு வருவதன் மூலமாகச் சரும பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை வெட்டைக்கு, ஐம்பது அறுகம்புல் பொடி ஐம்பது கிராம் கடுக்காய் பொடி சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். அதனைத் தினமும் காலை, மாலை, சாப்பாட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன், ஒருடம்ளர் தண்ணீரில், ஒரு தேக்கரண்டி பொடி போட்டு குடித்து வரவும். அவ்வாறு குடித்து வருவதன் மூலமாக நாளடைவில் வெள்ளை வெட்டை குணமாகும்.
குழந்தைகளுக்குத் தீராத சளி இருமலுக்கு அறுகம்புல் துளசி இரண்டையும் சிறிதளவு சேர்த்து அதனைச் சிறிது தண்ணீரில் ஊறவைத்து காலையில் குழந்தைகளுக்குக் கொடுக்க சளி, இருமல் தீராத சளி,இருமல் சரியாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu