Best Before..️Used By..Expired... இதன் பொருள் தெரியுமா..?

Best Before..️Used By..Expired... இதன் பொருள்  தெரியுமா..?
X

பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள் -கோப்பு படம் 

இந்த மூன்றுக்கும் உள்ள வித்தியாசங்களை பற்றி பார்க்கலாம்.

Best Before என்பது எந்த தேதிக்குள் பயன்படுத்தினால் நல்ல தரத்துடன் இருக்கும் என்பதன் தேதியை குறிக்கிறது. "Best Before" தேதி, பொருளின் "தரத்திற்கு" பொருந்துகிறது. இந்த தேதிக்கு முன்னர், உங்களுடைய உணவுப்பொருள் நல்ல சுவை, நறுமணம், மற்றும் புதிய தன்மை ஆகியவற்றுடன் இருக்கும்.

"Best Before" தேதிக்குப் பிறகும் அதைச் சாப்பிடலாம் பயன்படுத்தலாம். ஆனால் சுவை, மணம் அல்லது மொறுமொறுப்பு தன்மை குறைந்திருக்கும்.

உதாரணமாக சிறிது நாட்கள் பழசாகிய சிப்ஸ்கள் "Best Before" தேதிக்குப் பிறகும் சாப்பிடலாம். ஆனால் அவை "Best Before" தேதிக்கு முன்பு இருந்த மொறுமொறுப்பு தன்மையுடன் இருக்காது.

அடுத்து.... Used By என்றால் உபயோகிக்க வேண்டிய நாள்/ "Used By" தேதி, "பாதுகாப்பு" தன்மைக்குள் உட்படுகிறது. இந்த தேதிக்குப் பிறகு, உணவு பாதுகாப்பற்றதாகி விடுகிறது. அதை சாப்பிட முடியாது. பார்ப்பதற்கு சரியாக இருக்கும் போதிலும் கட்டாயம் பயன்படுத்தக்கூடாது.

"Used By" தேதிக்குப் பிறகு உள்ள பொருளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக பாலினை "Used By" தேதிக்குள் உபயோகிக்க வேண்டும். பிறகு அது கெட்டு பாழாகி, பாதுகாப்பற்றதாக மாறி விடும்.

கடைசியாக...Expired என்றால் காலாவதியானது என அர்த்தம். "Expired" என்பது ஒரு பொருள் பாதுகாப்பற்றது அல்லது திறனற்றது என்பதை குறிக்கிறது. இது பொதுவாக மருந்துகள், உடல்நலச்செயலிகள், அல்லது அழகுப் பொருள்களுக்குப் பயன்படுத்தப்படும். காலாவதியான பொருள்களை உபயோகிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது பயனற்றதாக இருக்கும்.

உதாரணமாக காலாவதியான மருந்து நோயை குணப்படுத்தாது. மேலும் அது உடல் நலத்துக்கு பக்க விளைவுகளை ( Side Effects ) ஏற்படுத்தக்கூடும்.

சுருக்கமாக சொன்னால் Best Before: இது "தரம்" குறித்தது. ஆனால் தேதிக்குப் பிறகும் சாப்பிடலாம். பாக்கெட் சிப்ஸ், சாம்பார்தூள், மிளகாய் தூள், மசாலா தூள் முதலியவை... (ஒரு சில முன்னெச்சரிக்கையுடன்)

Used By: இது "பாதுகாப்பு" குறித்தது. தேதிக்குப் பிறகு உண்ணக் கூடாது. பால், தயிர், கெட்ச்சப், பிரெட், பனீர் முதலியவை...இதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும். Expired: இது பாதுகாப்பற்றது, திறனற்றது அல்லது பயன்படுத்தும் தகுதியை முற்றிலும் இழந்தது. பொதுவாக உணவில்லா (Non Food Items) பொருட்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும். பூச்சிக்கொல்லி, கொசுவர்த்தி/லிக்விட், மாத்திரை, இருமல் டானிக் முதலியவை...

சோலி முடிஞ்சதுனா... தூக்கி குப்பைல போடுங்க...

Tags

Next Story
இந்த குளிர்காலத்துல டெய்லியும் வெந்நீர்ல குளிக்கிறீங்களா?.. கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க!