சுகாதாரத்துறையில் பணியிடங்கள் காலி: விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

சுகாதாரத்துறையில் பணியிடங்கள் காலி: விண்ணப்பிக்க நீங்க ரெடியா?
X

கோப்பு படம் 

ஈரோடு மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலையம் நல்வாழ்வு மையங்களில், 65 பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் அல்லது சுகாதார ஆய்வாளர்கள் நிலை-2 (ஆண்) மற்றும் 123 இடைநிலை சுகாதார பணியாளர்களின் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தற்காலிகமாக பணிபுரிவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை https://erode.nic.in/notice-category என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேலும், ஈரோடு திண்டலில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய சான்றிதழ் நகல்களுடன் ஈரோடு திண்டல் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில், வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
ai and business intelligence