பால் கூட்டுறவு சங்க வங்கி கணக்கில் பணம் முறைகேடு: தேனி எஸ்பி -யிடம் புகார்

பால் கூட்டுறவு சங்க வங்கி கணக்கில் பணம் முறைகேடு:  தேனி எஸ்பி -யிடம் புகார்
X
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பால் கூட்டுறவு சங்க வங்கி கணக்கில் இருந்து மாயமான பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தேனி எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, திம்மரசநாயக்கனுார் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சத்து இருபத்தி எட்டாயிரம் ரூபாய் நுாதன முறையில் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக தேனி எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி திம்மரசநாயக்கனுார் எம்.எஸ்.கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இந்தியன் வங்கியில் வைத்துள்ள கணக்கின் வாயிலாக சங்க வரவு செலவு பரிவர்த்தனைகள் காசோலைகள் மூலம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த வாரம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை இந்த கூட்டுறவு வங்கி கணக்கில் வரவு வைத்தது.

இந்நிலையில் இந்த வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து இருபத்தி எட்டாயிரம் ரூபாய் பணத்தை யாரோ நுாதன முறையில் கையாடல் செய்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கண்டறிந்து சங்க பணத்தை மீ ட்டுத்தருமாறு கூட்டுறவு சங்க தலைவர் ரெங்கசாமி தேனி எஸ்.பி. யிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப்புகார் மீது விசாரணை நடத்த ஆண்டிபட்டி போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.


Tags

Next Story
why is ai important to the future