வாக்கு எண்ணிக்கைக்கு போறீங்களா..? கொரோனா பரிசோதனை கட்டாயம்

வாக்கு எண்ணிக்கைக்கு போறீங்களா..?   கொரோனா பரிசோதனை கட்டாயம்
X
நன்னிலத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு செல்வோருக்கு கொரோனாப் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற இருப்பதையொட்டி, அந்த வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளக்கூடிய நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கைப் பணிக்குச் செல்லக்கூடிய அரசு அலுவலர்களுக்குக் கொரோனாப் பரிசோதனை சிறப்பு முகாம் நன்னிலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமை நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இரா.பானுகோபன் துவக்கி வைத்தார். சிறப்புக் கொரோனாப் பரிசோதனை முகாமில், மருத்துவர்கள் தினேஷ், ஜெகஜீவன்ராம், பிரீதி, ஜெரால்ட், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜோதி ஆகியோர் தலைமையிலான மருந்தாளுநர்கள், ஆய்வகப் பரிசோதகர்கள், செவிலியர்கள், 500 க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் அலுவலர்களுக்குக் கொரோனாத் தொற்றுப் பரிசோதனை நடத்தினர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?