7 மணியுடன் தமிழக வாக்குப்பதிவு நிறைவு பெற்றது

7 மணியுடன் தமிழக வாக்குப்பதிவு நிறைவு பெற்றது
X
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மலை 7 மணியுடன் நிறைவடைந்தது.

7 மணியுடன் தமிழக வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

திட்டமிட்டப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய 'தேர்தல் திருவிழா' மலை 7 மணியுடன் நிறைவு பெற்றது. கடந்த 15 நாட்களாக தமிழகம் முழுவதும் முழங்கி வந்த 'வாக்காள பெருமக்களே' என்ற சத்தம் 4ம் தேதியுடன் முடிவடைந்து, தேர்தல் நாள் 6ம் தேதி என்று அறிவிக்கப்பட்டபடி, இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

ஆங்காங்கு சில சச்சரவுகள் நடந்தாலும் கூட தமிழகத்தில் பெரிய அசம்பாவித சம்பவங்கள் நடக்கவில்லை என்பது மகிழ்ச்சிக்குரியது. வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டதால் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைக்கும் பனி நடந்து வருகிறது. அதன் பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறையும் சீல் வைக்கப்படும்.

Tags

Next Story
ai in future agriculture