namakkal news today-JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கு

namakkal news today-சிறப்பு விருந்தினர் கவுரவிப்பு.
namakkal news today-குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறையும், ஈரோட்டை சேர்ந்த டைம் நிறுவனமும் இணைந்து,தொழில் வழிகாட்டுதல் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கிணை மே 5ம் தேதி அன்று கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கில் நடைபெற்றது.
JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர். தமிழரசு அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் டைம் நிறுவனத்தின் மூத்த பொறியாளர் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ மாணவிகளுக்கு தொழில் வழிகாட்டுதல் பற்றி விரிவாக பயிற்சி அளித்தார்.
கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள்.
namakkal news today-சிறப்பு விருந்தினருக்கு கல்லூரியின் நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் முதல்வர் முனைவர்.தமிழரசு ஆகியோர் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் டைம் நிறுவனத்தின் மூத்த பொறியாளர் தியாகராஜன், கல்லூரியின் பல துறை தலைவர்களான செந்தில், கார்த்திக், சத்யசீலன், திருநாவுகரசு,விமலா,கலைவாணி,கிருத்திகா ஆகியோரும் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள்.
பயிற்சியில் பல்வேறு துறைகளை சார்ந்த 200 மாணவ, மாணவிகள் பங்கேற்று, பயிற்சி சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறை,மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை செய்திருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu