குமாரபாளையம், J.K.K. ரங்கம்மாள் அறக்கட்டளை சார்பில் மறுவாழ்வு இல்லப்பணிக்காக நிதியுதவி

குமாரபாளையம், J.K.K. ரங்கம்மாள் அறக்கட்டளை சார்பில் மறுவாழ்வு இல்லப்பணிக்காக நிதியுதவி
X

அட்சயம் அறக்கட்டளைக்கு நிதி வழங்கும் J.K.K.ரங்கம்மாள் அறக்கட்டளை தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை மற்றும் JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஓம்சரவணா ஆகியோர்.

J.K.K. ரங்கம்மாள் அறக்கட்டளை சார்பில், ஈரோடு அட்சயம் அறக்கட்டளையின் மறுவாழ்வு இல்லப்பணிக்காக ரூ. 1.20 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில், J.K.K. ரங்கம்மாள் அறக்கட்டளை பல்வேறு நல உதவிகளை வழங்கி வருகிறது. கல்விப்பணி மட்டுமல்லாமல், மருத்துவப்பணி, சமூக நல உதவிகள் மற்றும் நிதி உதவிகளை சமூக வளர்ச்சிக்காக வழங்கி வருகிறது.

அந்த வகையில் குமாரபாளையம், J.K.K. ரங்கம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீமதி. செந்தாமரை மற்றும் JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ஓம்சரவணா ஆகியோர் அறக்கட்டளை சார்பில் ரூ. 1.20 லட்சம் நிதி உதவியை, ஈரோட்டில் இயங்கி வரும் அட்சயம் அறக்கட்டளைக்கு வழங்கினார்கள். இந்த நிதியானது ஈரோடு, நசியனூரில் புதிதாக கட்டப்பட உள்ள மீட்டெடுக்கப்பட்ட யாசகர்களுக்கான மறுவாழ்வு இல்லப்பணிக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த நிதி உதவிக்கான காசோலையை அட்சயம் அறக்கட்டளை நிறுவனரும் தலைவருமான நவீன்குமார் பெற்றுக்கொண்டார்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்