காஞ்சிபுரத்தில் வீடுகள் தோறும் காய்ச்சல் பரிசோதனை - ஆணையர் மகேஸ்வரி

காஞ்சிபுரத்தில்  வீடுகள் தோறும் காய்ச்சல் பரிசோதனை  - ஆணையர் மகேஸ்வரி
X

வீடு வீடாக சென்று உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் பணியாளர்கள்.

பதினைந்தாயிரம் வீடுகளில் உள்ளவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்தை தொடர்ந்து காய்ச்சல் கண்டறிதல் முகாம் , வீடு வீடாக சென்று உடல் வெப்ப நிலையை கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவ சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் அமைந்துள்ள ஐம்பத்தொரு வார்டுகளில் சுழற்சி முறையில் நாள்தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இன்று சின்ன காஞ்சிபுரம் திருப்புகூடல் தெருவில் நடைபெற்ற ஒருநாள் சிறப்பு பரிசோதனை முகாம் மற்றும் அன்னை சத்யா நகரில் நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் கண்டறியும் முகாம் ஆகியவற்றில் பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் , காஞ்சிபுரம் பெரு நகராட்சி சார்பில் நாள்தோறும் தூய்மை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதாகவும் இன்று முதல் 106 பணியாளர்களைக் கொண்டு சிறப்பு குழு அமைக்கப்பட்டு 15 ஆயிரம் வீடுகளில் உள்ளோருக்கு வெப்பநிலை கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் நாளொன்றுக்கு மொபைல் வாகனம் மற்றும் வார்டு பகுதியில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தினசரி 2000 மாதிரிகள் வீதம் இதுவரை 2,57,487 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பெருநகராட்சி எல்லைக்குள் ஒருநாள் விதிகளை மீறி அவரிடம் இருந்து இதுவரை 17 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது நகராட்சி பணியாளர் சுழற்சி முறையில் நகரில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

Tags

Next Story