எம்ஜிஆர் படத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை

எம்ஜிஆர் படத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன்  மலர் தூவி மரியாதை
X

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

எம்ஜிஆர் படத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆரின் 105 வது பிறந்தநாள் அரசு விழாவை முன்னிட்டு சென்னை கிண்டி டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில், அவரது முழு உருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் முதலமைச்சர் பாரதரத்னா எம்ஜிஆருக்கு தமிழக அரசு சார்பில் மிக சிறப்பாக பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. தமிழக முதல்வர் வழிகாட்டுதல்படி மிகச் சிறப்பாக நடக்கிறது.

கடந்த 1962 முதல் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1967 முதல் சட்டமன்ற உறுப்பினராகவும், 1969 முதல் திமுக பொருளாளராக திறம்பட பணியாற்றியவர் எம்ஜிஆர். 10 ஆண்டுகள் தமிழக முதல்வராக சிறப்பாக பணியாற்றியவர் எம்ஜிஆர்.. அவரது பிறந்தநாளில் மலர் தூவி மரியாதை செலுத்துவதை தமிழக அரசு பெருமையாக கருதுகிறது.

கடந்த 2 நாட்களாக கொரோனா குறைத்து வருகிறது. மேலும் குறைய வாய்ப்பு என்றாலும் பொங்கல் விடுமுறைக்கு பிறகான சோதனை மூலம் கூடுதல் தொற்று ஏற்பட வாய்ப்பு. நாள்தோறும் ஒன்றரை லட்சத்துக்கும் குறையாமல் பரிசோதனை. மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

மாதவரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 2ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 1லட்சத்து 91 ஆயிரத்துக்கு மேல் படுக்கைகள் தயாராக இருந்தாலும், 9 ஆயிரம் வரையே நிரம்பியுள்ளது. ஆக்சிஜன், மருந்து, மாத்திரை போதுமான அளவு இருப்பு உள்ளது. தடுப்பூசி செலுத்திய பலர் மரணத்தின் விளிம்புக்கும் சென்றும் உயிர் திரும்பியுள்ளனர். 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 76 சதவீத பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது.

2ம் தவணையை 90லட்சத்துக்கும் மேலானோர் செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். 60 வயதை கடந்தோர் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

ஞாயிறு முழு ஊரடங்கு முழு வெற்றி பெற்றது. கட்டுப்பாடுகளை மீறி பட்டினப்பாக்கம் போன்ற காவல்துறை கட்டுப்பாடு குறைவான பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடினாலும் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படுகின்றனர்.

கொரோனா காலத்திலும் பிற நோய்களுக்கும் சுணக்கம் இல்லாமல் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் முறையாக பிற நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் குறைபாடு இருப்பதாக புகார்கள் இருந்தால் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்