சோழவந்தான் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை

சோழவந்தான் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை
X

மதுரை அருகே முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட முத்தையா.

சோழவந்தான் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

சோழவந்தான் அருகே முன் விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விசேஷ நிகழ்ச்சியில் தகராறு செய்தவரை விக்கிரமங்கலம் அருகே கொலை செய்ய சென்றவர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா மட்டப்பாறை கிராமத்தில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சியில், பங்கேற்றவர்களில் இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக பாதிக்கப்பட்ட மர்மகும்பல் நேற்று மாலை சம்பந்தப்பட்டவரை தேடி விக்கிரமங்கலம் அருகே உள்ள கல்புளிச்சாம்பட்டி கிராமத்திற்கு 6பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் சென்று உள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்ட அண்ணன் தம்பி இருவரையும் 6 பேர் கொண்ட கும்பல் ஆயுதத்துடன் விரட்டி உள்ளனர். இதில் ,அண்ணன் தம்பி இருவருக்கும் கத்தி குத்து விழுந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் திரண்டு மர்மக் கும்பளை விரட்டி உள்ளனர்.இதனால், மர்மகும்பல் ஐந்து பேர் மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டனர் ஒருவர் மட்டும் கத்தியுடன் இருந்திருக்கிறார். இவரை கத்திக்குத்து பெற்ற அண்ணன் தம்பி இருவரும் அவருடைய கத்தியை வாங்கி சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தப்பி ஓடிய மர்ம கும்பலில் ஒருவரை கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத் ததாகவும் மற்றவர்களை தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

கொலை சம்பந்தமாக பொதுமக்கள் கூறுகையில் போதை பொருளுக்கு அடிமையாகி ஆங்காங்கே ரவுடியிசம் பெருகி வருவதாகவும் இதில் ,சம்பந்தம் இல்லாத கிராமமக்கள் பல பேர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

கொலை நடந்த தகவல் தெரிந்து விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையான வாலிபர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர் இதுகுறித்து, உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் செக்கனூரணி இன்ஸ்பெக்டர் திலகராணி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கொலையில் இறந்தவர் திருமங்கலம் அருகே செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா வயது 29 என்றும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, கூறப்படுகிறது.

Tags

Next Story
ai automation in agriculture