திருத்தணி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

திருத்தணி  அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது
X
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்.
திருத்தணி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருத்தணி அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை, வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் (வயது 25) என்பவர் சிறுமியை நீண்ட நாட்களாக பின் தொடர்ந்து காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி வந்துள்ளார். அந்த சிறுமியும் ஜெய் சங்கர் கூறிய ஆசை வார்த்தைகளில் மயங்கினார். இதனை தொடர்ந்து சிறுமியை ஜெய் சங்கர் கடந்த அக்டோபர் மாதம் வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியிடம் ஜெய்சங்கர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து ஜெய்சங்கரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.

இந்நிலையில் ஜெய்சங்கருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சதீஷ் (வயது 27) என்பவரை இன்று போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் கடந்த சில காலமாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதாகவும் இதுபோன்று செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றும் எனவே சட்டங்களை கடுமையாக்க வேண்டுமென பல்வேறு தரப்பு மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story
ai tools for testing