களியக்காவிளை அருகே சாலை விபத்தில் நண்பர்கள் இருவர் உயிரிழப்பு

களியக்காவிளை அருகே சாலை விபத்தில் நண்பர்கள் இருவர் உயிரிழப்பு
X
களியக்காவிளை அருகே சாலை விபத்தில் நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே அம்சி பகுதியை சேர்ந்தவர் விபின் (வயது 19), கூலி தொழிலாளி. இவரும், அதே ஊரை சேர்ந்த வினித் (20),என்ற பிளம்பிங் தொழிலாளியும் நண்பர்கள். வினித்துக்கு செல்போன் வாங்குவதற்காக நேற்று இரவு 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில்காப்பிக்காடு பகுதிக்கு சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளை விபின் ஓட்டி சென்றார். அவர்கள் இருவரும் காப்பிக்காடு பகுதியில் உள்ளசெல்போன் கடைக்கு சென்று செல்போன் ஆர்டர் செய்தனர்.

பின்னர் குழித்துறை பகுதியில் உள்ள விபின் உறவினர் வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளில் குழித்துறை அருகே ஆற்றுப் பாலம் பகுதியில் வந்தபோதுஎதிரே கேரளாவில் இருந்து பால் ஏற்றி வந்த மினி டெம்போ எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே விபின் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து விபின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் வினித் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்துதொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த விபத்தால் குழித்துறை பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உறவினர் வீட்டுக்கு சென்றவாலிபர்கள் வாகனம் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!