திருத்தணி அருகே 4 வீடுகளில் அடுத்தடுத்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்
திருத்தணி அடுத்த சின்னநாகபூடி கிராமத்தில் 4-வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது. 7 சவரன் நகை மற்றும் ரூபாய் 37 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சின்னநாகபூடி கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த கிராமத்தில் கொள்ளையர்கள் வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆனந்த வடிவேல் அவரது மனைவி சாந்தி வீட்டில் நள்ளிரவு பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் வீட்டின் பீரோ மற்றும் அனைத்து இடங்களிலும் கொள்ளை அடிக்க தேடி பார்த்து உள்ளனர் எதுவும் கிடைக்காததால் ஆனந்த வடிவேல் தூங்கிக் கொண்டிருந்த அறை பகுதிக்கு சென்று அவரை உருட்டு கட்டையால் தாக்கி மிரட்டி அவரது மனைவி கழுத்தில் இருந்த தாலி தங்கச் சங்கிலி 5.சவரன் பறித்துக் கொண்டு அவரையும் கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.
இதே போல் கணபதி என்பவர் வீட்டின் பூட்டிவிட்டு கல்யாணத்திற்கு வெளியூர் சென்றிருப்பதால் அவர் வீட்டின் பூட்டை உடைத்து 20 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதேபோல் பெங்களூரில் வசித்து வரும் கஜேந்திரன் என்பவர் வாரத்தில் மூன்று முறை இந்த வீட்டிற்கு வருவார். தற்போது இவர் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்டு இவரது வீட்டிற்குள் சென்ற கொள்ளையர்கள் வீட்டு பீரோவில் இருந்த சிறு சிறு நகைகள் 2-சவரன் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் பணம், வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர், மேலும் முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் வெளியூருக்கு சென்று இருந்ததால் கொள்ளையர்கள் இவரது வீட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த ரூபாய் 5 ஆயிரம் பணத்தை கொள்ளை டித்துச் சென்றுள்ளனர்.
ஒரே இரவில் கொள்ளையர்கள் 7- சவரன் நகை, 37 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் வெளியூருக்கு சென்று இருந்த 4 பேரின் வீடுகளையும் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தும் வீடுகளில் எதுவும் இல்லாததால் திரும்பி சென்றது தெரிய வந்தது.
மாநில நெடுஞ்சாலையில் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடாததே இது போன்ற கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu