காவல் நிலைய வாசலில் தனியார் நிதி நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை

காவல் நிலைய வாசலில் தனியார் நிதி நிறுவன  ஆடிட்டர் அடித்துக் கொலை
X

கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ராபர்ட்.

திருவள்ளூரில் காவல் நிலையம் முன்பு தனியார் நிதி நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தனியார் நிதி நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அக்காவை கிண்டல் செய்த புகாரில் விசாரணைக்கு வந்து திரும்பியபோது அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவள்ளூர் அடுத்த கண்ணதாசன் நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராபர்ட். இவர் காக்களூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் அதேபகுதியில் உள்ள நிறுவனத்தில் லாவண்யா ( வயது 26) என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார்.இவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லாவண்யாவை ஆடிட்டர் ராபர்ட் கிண்டல் செய்து வந்துள்ளார். இதுகுறித்து லாவண்யா திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராபர்ட்( வயது 46) மீது புகார் அளித்ததையடுத்து விசாரணைக்கு ஆஜரான நிலையில் மீண்டும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து ராபர்ட் வெளியே வந்தார். அப்போது அங்கு ராபர்ட்டை காவல் நிலைய வாசலில் வைத்து லாவண்யாவின் சகோதரர் மௌலி என்பவர் தலையில் 3 முறை பலமாக தாக்கியுள்ளார்.

இதில் அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலிலேயே சுருண்டு விழுந்த ராபர்ட் சம்பவ இடத்திலேயே துடிப்பிடித்து உயரிழந்தார்.காவல் நிலைய வாசலில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து லாவண்யாவின் தம்பி மௌலியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மௌலிக்கு வயது 23 ஆகிறது. காவல் நிலைய வாசலிலே ஆடிட்டர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!