பூந்தமல்லி அருகே பிளம்பர் வெட்டிக்கொலை: கொலையாளிகள் 3 மணி நேரத்தில் கைது

பூந்தமல்லி அருகே பிளம்பர் வெட்டிக்கொலை: கொலையாளிகள் 3 மணி நேரத்தில் கைது
X

கொலை செய்யப்பட்ட விஜயகாந்த்.

பூந்தமல்லி அருகே முன் விரோதம் காரனமாக வீடு புகுந்து பிளம்பர் வெட்டி கொலை‌ செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவேற்காட்டில் முன் விரோதம் காரணமாக பிளம்பரை வெட்டி கொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த அவரது தாயையும் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொலை நடந்த 3 மணி நேரத்தில் கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி, திருவேற்காடு சுந்தர சோழபுரம் செல்லியம்மன் கோவில் தெருவில் சேர்ந்தவர் விஜயகாந்த் ( வயது 20). பிளம்பிங் வேலை பார்த்து வந்த இவர் தனது தாய் சத்யாவுடன் வசித்து வந்தார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த விஜயகாந்த் இரவு உணவு அருந்தி விட்டு தன் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு ஒன்றரை மணி அளவில் ஒரு கும்பல் ஒன்று விஜயகாந்த் வீட்டு கதவை தட்டியது. கதவு தட்டும் சத்தம் கேட்டு விஜயகாந்தின் தாய் சத்யா எழுந்து வந்து கதவைத் திறந்த போது அந்த கும்பல் அவரை தள்ளிவிட்டு உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்த விஜயகாந்தை சரமாரி வெட்டி கொலை செய்தனர். இதனை தடுக்க வந்த அவரது தாய் சத்யாவையும் கையில் வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


இதனைப் பார்த்து அதிர்ந்து போன சத்யா கதறி அழுத சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கொலையாளிகளை பிடிக்க முயன்ற போது அவர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பி சென்றனர்.

பின்னர் சத்யா இது குறித்து திருவேற்காடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீஸார் விஜயகாந்த் உடலை மீட்டு சென்னை கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இக்கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஆண்டு அதே பகுதி சேர்ந்த ஆரோக்கியசாமி( வயது 23) என்பவருக்கும் விஜயகாந்துக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் விஜயகாந்த் தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து ஆரோக்கியசாமியை வெட்டியதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் விஜயகாந்தை பழிதீர்க்க எண்ணிய ஆரோக்கியசாமி நேற்று நள்ளிரவு தனது கூட்டாளிகளான சரவணன், விக்னேஷ், ஆகியோருடன் சென்று வீடு புகுந்து விஜயகாந்தை வெட்டி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து போலீஸார் தலைமறைவாக இருந்த ஆரோக்கியசாமி,( வயது 20), சரவணன்( வயது 20), விக்னேஷ்( வயது 20) ஆகிய மூன்று பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்த 3 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.ரோத

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!