நத்தம் மளிகை கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு: போலீசார் விசாரணை

நத்தம் மளிகை கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு: போலீசார் விசாரணை
X

திருட்டு நடந்த மளிகை கடையில் பதிவான இருந்த சிசிடிவி கேமரா காட்சி.

நத்தம் மளிகை கடையில் பூட்டை உடைத்து பணம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நத்தத்தில் மளிகை கடை பூட்டை உடைத்து திருடிய மர்ம ஆசாமிகளை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மதுரை ரோட்டில் உள்ள வனச்சரக அலுவலகம் எதிரே அழகர் மளிகை கடை உள்ளது. இது நத்தம் மீனாட்சி புரத்தைச் சேர்ந்த அழகர் என்ற சந்தனம் (45) என்பவருக்கு சொந்தமானது. இவர் நேற்றிரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க அழகர் என்ற சந்தனம் சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியுற்றார்.

உடன் கடைக்குள் சென்று தான் கடையில் வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் பணம் திருட்டு போனதால் மேலும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து நத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்தனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது 2 மர்ம நபர்கள் கடையின் உள்ளே நடமாட்டம் இருப்பதும் அவர் கல்லாப் பெட்டியில் உள்ள பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!