புரோட்டா சாப்பிட்ட பொறியியல் கல்லூரி மாணவர் கோவையில் உயிரிழப்பு
இரவில் ஓட்டலில் சென்று புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் காலையில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புரோட்டா பலருக்கும் பிடித்த உணவு, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென்மாவட்ட மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது புரோட்டா தான். தூத்துக்குடி பொறிச்ச புரோட்டா, விருதுநகர் எண்ணெய் புரோட்டா, மதுரையில் பன் புரோட்டா என ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையிலான புரோட்டோ பேமஸ் ஆக உள்ளது. சென்னையை பொறுத்தவரை உணவு பிரியர்களின் சொர்க்க பூமி இங்கு எல்லா வகை புரோட்டாக்களும் பேமஸ்.
புரோட்டாவை பொறுத்தவரை மைதாவில் தயாரிக்கப்படும் உணவாகும். மைதா மாவை வெண்மையாக்க கெமிக்கல் கலக்கப்படுகிறது. அந்த கெமிக்கல்களை சாப்பிடும் போது நோய்கள் ஏற்படுவது நடக்கிறது. புரோட்டா சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படவும், நீரிழிவு நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக பலமுறை மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். ஆனாலும் மக்கள் அதன் ருசிக்கு அடிமையாகி புரோட்டா சாப்பிடுவதை தொடர்கிறார்கள். கோவையில் புரோட்டா சாப்பிட்ட இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
திருப்பூரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் (வயது20)என்ற மாணவர் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். இவர் கோவை அருகே கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து புரோட்டா சாப்பிட்டாராம். காலையில் கல்லூரி மாணவர் ஹேமச்சந்திரன் அசைவில்லாமல் கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மாணவன் ஹேமச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சக மாணவர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து சூலூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக இதேபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அடிக்கடி நடந்துள்ளது. சென்னையில் கடந்த ஜனவரி மாதம் இளைஞர் ஒருவர் புரோட்டா சாப்பிட்ட நிலையில், உயிரிழந்தார். அப்போது நீரழிவு மருத்துவர்கள் கூறும் போது, கோதுமை,பிரான் ஜெம் போன்ற பொருட்களை கொண்டு மைதா தயாரிக்கப்படுகிறது. பிரானில் அதிகப்படியான நார்ப்பொருள், வைட்டமின் பி உள்ளது. ஜெர்மியில் கார்போ ஹைட்ரேட் மாவு சத்து இருக்கிறது. இவற்றில் அதிகப்படியான கொழுப்பு சத்துக்கள் இருப்பதால் மைதாவில் குளுடேன் அதிகமாக உள்ளதால் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் ஆகும்.
மைதா மற்றும் ரவையில் இருந்து பரோட்டா தயாரிக்கப்படுவதால் உடலுக்கு நீரழிவு நோய் வர வாய்ப்பு உள்ளது. மைதாவில் உள்ள alaxan என்ற வேதி பொருள் கலக்கப்படுவதால் நீரழிவு நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மைதா, கணைய நீர் சுரப்பியை சோர்வு அடைய செய்து சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கிறது. இதனால் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரப்பிகளை பாதித்து சர்க்கரை நோயை உருவாக்குகிறது. இருதய இரத்த நாளங்களில் அதிகப்படியான கொழுப்புகள் சேருவதால் இருதய கோளாறுகள், இரத்த அடைப்புகளும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர்களின் கூற்றுப்படி புரோட்டா சாப்பிடுவது நமது உடல் நலத்திற்கு தீங்கானது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் புரோட்டாவிற்கு தடை செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu