மதுரையில் தி.மு.க. வட்டச்செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை

மதுரையில் தி.மு.க. வட்டச்செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை
X

கொலை செய்யப்பட்ட தி.மு.க. வட்டச் செயலாளர் திருமுருகன்.

மதுரையில் தி.மு.க. வட்டச்செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

மதுரையில் தி.மு.க. வட்ட செயலாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை எம் .கே‌. புரத்தைச் சேர்ந்தவர் திருமுருகன். இவர் 78 வது வார்டில் தி.மு.க. வட்ட செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு தி.மு.க.வில் பதவி வழங்கியது சக உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம் போல் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து திருமுருகன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய மர்ம கும்பல் திருமுருகன் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து அவரின் உடலில் பல்வேறு இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி இருக்கின்றனர். இதனால், சம்பவ இடத்திலேயே திருமுருகன் துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் அறிந்து விரைந்து வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் திருமுருகன் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? உறவினர்களா அல்லது அரசியல் முன் விரோதம் ஏதேனும் இவருக்கு உள்ளதா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ,அப்பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் திமுக வட்டச்செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!