வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கொலை செய்த காதலன் கைது

வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கொலை செய்த காதலன் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரி. கட்டிட மேஸ்திரி. இவரது மகள் ரேணுகா. வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை அதே கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற ரேணுகா, பின்னா் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை மாரி அளித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து ரேணுகாவை தேடி வந்தனா்.

இந்நிலையில் போலீசார் ரேணுகாவின் செல்போனை ஆய்வு மேற்கொண்டனர் . அப்போது ரேணுகா கடைசியாக அதே ஊரைச் சேர்ந்த பாரதி நகர் நீலமேகம் என்பவரின் மகன் யோகேஸ்வரனிடம் செல்போனில் பேசியது தெரிய வந்தது.

இதையடுத்து செல்போன் எண்ணை வைத்து யோகேஸ்வரனை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

பின்னர் நடத்திய தீவிர விசாரணையில், யோகேஸ்வரன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரும் ரேணுகாவும் 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் சனிக்கிழமை அன்று சந்தித்து பேசிய நிலையில் மற்றொரு பெண்ணை காதலிப்பது தொடா்பாக அவரிடம் ரேணுகா கேட்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.

இதனால் ஆத்திரம் அடைந்த யோகேஸ்வரன் ரேணுகா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவினால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் ரேணுகாவின் பிணத்தை அங்குள்ள முட்புதரிலேயே வீசிவிட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது.

பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் வந்தவாசி தெற்கு போலீசார் நேற்று இரவு சென்று முட்புதரில் இருந்த ரேணுகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் யோகேஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Sep 2023 11:56 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு
  2. தமிழ்நாடு
    வெள்ள நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள்
  3. வணிகம்
    Business News In Tamil 2030-ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ...
  4. திண்டுக்கல்
    நத்தம் மின்வாரிய அலுவலக வாசலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
  5. தமிழ்நாடு
    மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்: அமைச்சர் அறிவிப்பு
  6. சினிமா
    Thalapathy 68 Songs மொத்தம் எத்தனை தெரியுமா?
  7. ஆலங்குடி
    குடிநீர் வழங்காததைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் நகராட்சி சார்பில் சென்னைக்கு ரூ.13 லட்சம் நிவாரண...
  9. புதுக்கோட்டை
    ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தை எதிர்த்து மனுக்கொடுக்கும் போராட்டம்.
  10. சோழவந்தான்
    மதுரையில் டெங்கு தடுப்பு பணி குறித்து மேயர் ஆய்வு