திருவள்ளூர் அருகே கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது
கொலை செய்யப்பட்ட சீனிவாசன்.
ஊத்துக்கோட்டை அருகே பென்னாலூர்பேட்டை கூலி தொழிலாளி மர்ம மரணத்தில் திடீர் திருப்பமாக அவரது மனைவி கள்ளக்காதலுனுடன் சேர்ந்து கணவனை கொன்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர்பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 43) கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதற்குப் பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாக நந்தினி என்கின்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில். கடந்த 4 ந் தேதி காட்டு பகுதியில் நந்தினி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இறந்து கிடந்த நபர் குறித்து பென்னாலூர் பேட்டை போலீசாரிடம் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்து இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.
இதனை தொடர்ந்து பென்னாலூர்பேட்டை போலீசார் சந்தேக மரணத்தை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் சீனிவாசன் மனைவி நந்தினிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய குமரன் என்ற இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், இதனை சீனிவாசன் கண்டித்ததால் கணவன் சீனிவாசனை நந்தினி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்து நெரித்து சகொலை செய்தது போலீஸ் விசாரணை அம்பலம் ஆனது.
இதனை தொடர்ந்து கணவனை கொன்ற நந்தினி,கள்ளக்காதலன் குமரன் ஆகிய இருவரையும் பென்னாலூர்பேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியே கொன்று நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu