சென்னை புழல் அருகே குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்தவர் கைது

சென்னை புழல் அருகே குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்தவர் கைது
X
சென்னை புழல் அருகே காரில் கடத்தி வந்து கடைகளுக்கு குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புழலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக குட்கா போதை பொருட்கள் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு அடிமையாகி பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வரும் மக்களையும்,பள்ளி, கல்லூரி மாணவர்களையும் போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகுவதை தடுக்கும் வகையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் ஒழிக்கும் வகையில் தமிழக அரசால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்.இதனை முற்றிலுமாக தடுக்கும் விதத்தில் காவல்துறையினர் அவ்வப்போது பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு கைது நடவடிக்கையும் எடுத்து வருகிறார்கள். ஆனாலும் போலீசார் கண்காணிப்பையும் மீறி பல இடங்களிலும் குட்கா பொட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள கடைக்கு கார் ஒன்று வந்து நின்றது. அந்த காரில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் இறக்கப்பட்டதை கண்டு பிடித்தனர்.

இதனை அறிந்த போலீசார் சோதனை மேற்கொண்ட போது அந்த கடையில் குட்கா போதப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. பின்னர் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்கா போதை பொருட்களை கடத்தி வந்ததாக மாரிசெல்வம் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா