பிகில் நாயகி காயத்ரி நடிப்பில் 'நீயும் நானும் '
பிகில் நாயகி காயத்ரி நடிப்பில் 'நீயும் நானும் '. இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸ்சிஸ் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் பாடல் " நீயும் நானும்" . இதில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜான் ஹாஜி நடித்திருக்கிறார். ஆலுப் ராஜூ பாடியிருக்கிறார். பாடலுக்கு வரிகள் கவிஞர் கபிலன் எழுதியிருக்கிறார்.
திரைப்பட இசையமைப்பாளரான ஜான் A அலெக்ஸ்சிஸ் " பழகிய நாட்கள் " எனும் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் மேற்கத்திய நாடுகளில் இசை பயின்றவர், தமிழ் மீதும், தமிழ் இசைமீதும் பற்றுகொண்டவர் . தனியிசை பாடல்கள் மேற்கத்திய நாடுகளில் பிரபலம் ஆனதுபோல தமிழ் இசைப்பாடல்களும் தற்பொழுது பிரபலமாகி வருவது வரவேற்கதக்கது. தமிழ் இசையின் இனிமையும், தமிழகத்தின் பாரம்பரிய வாத்தியக்கருவிகளின் சிறப்பையும் உலகம் மெல்ல உள்வாங்க ஆரம்பித்திருக்கிறது.
விரைவில் தமிழ் இசைப்பாடல்களுக்கு உலக அரங்கில் தனியிடமே உண்டாகியிருக்கும் என்கிறார் இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸ்சிஸ் 'நீயும் நானும் ' பாடலை இசையமைத்து தயாரித்து வெளியிட்டிருக்கும் ஜான் A அலெக்ஸ்சிஸ் மூன்று திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தொடர்ந்து தனியிசைப்பாடல்கள் இசையமைப்பதிலும் கவனம் செலுத்துவேன் என்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu