ரஜினி, நயன்தாராவை 2 படத்துக்கும் ஹீரோயினாக ஏன் தேர்ந்தெடுத்தார் தெரியுமா..?

ரஜினி, நயன்தாராவை 2 படத்துக்கும் ஹீரோயினாக ஏன் தேர்ந்தெடுத்தார் தெரியுமா..?
X

ரஜினிகாந்த் நயன்தாராவுடன்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடித்து வெளியான 2 படங்களில் நயன்தாராவையே ஹீரோயினாக தேர்வு செய்துள்ளார்.அதற்கு காரணம் என்ன?

ரஜினி சமீபத்தில் நடித்து வெளியான தர்பார்,அண்ணாத்தே படங்களில் நயன்தாராவையே ஹீரோயினாக தேர்வு செய்துள்ளார். அதற்கு ரஜினியின் சரியான தேர்வுதான் காரணம்.

நயன்தாராவுக்கு 38 வயது. (அவருக்கு வயது ஏறுவதை எண்ணி ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்) அவரது முகத்திலும் ஒரு முதிர்ச்சி தெரிய தொடங்கிவிட்டது.(ஐயோ..அவரது ரசிகர்கள் என்னை அடிக்க எதுவும் வந்துவிடப்போகிறார்கள்?) இருந்தாலும் சொல்லித்தானே ஆகவேண்டும். முதிர்ச்சி முகத்தில் மட்டும் இல்லீங்க. நடிப்பிலும்தான்.


மேலும் நயன்தாரா அழகாகவும் இருக்கிறார்.(இப்போ..ரசிகர்கள் என்னை திட்டமாட்டார்கள்). இன்னொண்ணு அவர் இன்னும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹீரோயின். (ரசிகர்கள் இன்னும் சந்தோஷப்படுவார்கள்) மற்ற இளம் ஹீரோயின்கள் ரஜினிக்கு மகள்கள் போல இருப்பார்கள். அது படத்தில். ஆனால், நிஜத்தில் பேத்திகளாக இருப்பார்கள். இவ்வளவு விஷயங்களையும் அலசி ஆராஞ்சிதான் ரஜினி நயனை தேர்வு செய்திருக்கிறார்.

அதேபோல் ரஜினியின் முந்தைய படங்களில் நடித்த கதாநாயகிகளைப் பார்த்தீர்கள் என்றால் காலாவில் ஈஸ்வரி ராவ், கபாலியில் ராதிகா ஆப்தே போன்றவர்கள். அந்த இருவருமே வயதான தோற்றம் உடையவர்கள். கண்ணியமாகவும் தோற்றமளிப்பவர்கள்.'பேட்ட' படத்தில் சிம்ரன் கூட முதிர்ந்த மற்றும் நடுத்தர வயதைக் காட்டி இருந்தார்.

ஆனாலும், நயன்தாரா ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்துகிறார். ரஜினிக்கும் ஏற்ற ஜோடியாக தெரிகிறார். மற்ற இளம் ஜோடிகளுடன் காதல் டூயட் பாடும்போது ஏற்படும் கில்டி உணர்வு ரஜினிக்கு நயன்தாராவுடன் ஏற்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அதனால் அவர் மற்றவர்களின் கேலி கிண்டலில் இருந்தும் தப்பித்துவிடுகிறார். அப்படிப்பார்த்தால் ரஜினி தனக்கு ஜோடியை தேர்வு செய்வதில் (ஏங்க.. படத்துக்குத்தான் சொல்றேன்) கில்லாடிதான் போல..!!

இன்டர்நெட் ஆதிக்கம் செலுத்தாத காலத்திலும் என்.டி.ராமராவ் ஸ்ரீதேவியுடன் நடனமாடியதற்காக கேலி செய்யப்பட்டார். அவர் 50 வயதுகளில் இருக்கும்போது, ஸ்ரீதேவிக்கு வெறும் 18 அல்லது 19 வயதுதான். இதில் நயன் முற்றிலும் வேறுபட்டவர். ரஜினிக்கு டூயட் பாடவும் அவரது முகம் முதிர்ச்சி காட்டுகிறது. அஜீத் மற்றும் விஜய்க்கும் நயன்தாராவின் டூயட் பிடிக்கிறது. அப்படிப்பார்த்தால் நயனை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்வது சரியாகத்தான் இருக்குமோ..? ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!