ஓ..இதனால்தான் தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி பிரிந்ததார்களா..?

ஓ..இதனால்தான் தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி பிரிந்ததார்களா..?
X

தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி.

எந்த காரணத்திற்காக பிரிந்தோம் என்று தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி கருத்து வெளியிடவில்லை.

கோலிவுட்-ஐ பொறுத்தவரை தனுஷ்- ஐஸ்வர்யா ஜோடி பவர்ஃபுல் ஜோடி. அவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் முடிந்து 2 குழந்தைகளும் உள்ளனர். அவர்கள் ஏன் திடீரென்று விவாகரத்து செய்தனர் என்று அவர்கள் விளக்கமாக எதுவும் கூறவில்லை. ஆனால் அவர்கள் சில விஷயங்களை நமது ஊகத்துக்கு விட்டுள்ளனர்.

தனுஷ் எப்போதும் வேலை வேலை என்றே உழைத்துக்கொண்டே இருப்பவர். எது எப்படி எனினும் வேலைக்கே முதன்மையான இடம் அளிப்பவராம். குடும்பம் இரண்டாம் இடத்துக்கு போனது. இதை ஐஸ்வர்யா பல நேரங்களில் தனுஷிடம் கூறியுள்ளதாகவும் ரஜினி குடும்பத்து நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே பிரிவுக்கான எந்த பெரிய காரணங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் பிரிவினை மிக நாகரிகமான வார்த்தை பிரயோகங்களில் வெளிப்படுத்தியுள்ளனர் என்பதை வைத்துப் பார்க்கும்போதே அவர்களுக்குள் பிரிவுக்கான பெரிய காரணங்கள் எதுவும் இல்லை என்பது தெரிகிறது.

ஆக, உண்மையான காரணம், தனுஷ் தொடர்ந்து படப்பிடிப்பு, ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது,பட வெளியீடு என்று எப்பொழுதும் ஒரு வேலை வட்டத்துக்குள்ளேயே இருந்திருக்கிறார். இது தனிப்பட்ட வகையில் ஐஸ்வர்யாவை பாதித்துள்ளது. அதாவது ஒரு குடும்பத்தலைவியாக, ஒரு தாயாக, ஒரு மனைவியாக அவரை பாதித்திருக்கலாம். குடும்ப உறவும் முக்கியமில்லையா..? அதன் விளைவே இந்த விவாகரத்து. பேசித் தீர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ரஜினி முன்னெடுத்தால் தீரும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!