தளபதி 69, தளபதி 70, இதில் எது விஜய் நடிக்கும் கடைசி படம்..?

தளபதி 69, தளபதி 70, இதில் எது விஜய் நடிக்கும் கடைசி படம்..?
X

விஜய்-ன் அடுத்த படம்? (கோப்பு படம்)

விஜய் அரசியல் கட்சி அறிவிப்பு வெளியிட்டதில் இருந்தே உலகம் முழுவதும் இருந்து அவரைப்பற்றிய தேடுதல்கள் அதிகமாகியுள்ளன. அவருக்கு எது கடைசி படம் என்ற வினாவும் எழுந்துள்ளது.

Which Is The Last Movie Of Thalapathy Vijay

தளபதி விஜய் நேற்று தனது அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியின் பெயரையும் வெளியிட்டார் என்பதை பார்த்தோம். மேலும் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இன்னும் ஒரே ஒரு படம் மட்டும் தான் நடிக்க இருப்பதாகவும், அதன் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Which Is The Last Movie Of Thalapathy Vijay

தற்போது அவர் ’கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவரது அடுத்த படம் தான் கடைசி படம் என்பதும் இந்த அறிக்கையில் இருந்து தெரிய வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை ராஜமவுலி இயக்கிய ’ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை தயாரித்த டிவிவி என்ற பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கிட்டத்தட்ட இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்நிறுவனம் தற்போது ஹங்ரி சீட்டா (Hungry Cheetah) என்ற டைட்டிலை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கும் இந்நிறுவனம் விஜய்யின் படத்திற்காக தான் இந்த டைட்டிலை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற முடிவை இன்னும் சில நாட்களில் விஜய் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக கார்த்திக் சுப்புராஜ் தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார் என்றும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

இந்த படத்திற்குப்பிறகு விஜய் நடிக்கமாட்டார் என்று ஒரு தகவலும் இன்னும் ஒரு படம் நடிப்பார். அது அரசியலில் முழுமையாக கால் ஊன்ற முத்திரை பதிக்கும் படமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

Which Is The Last Movie Of Thalapathy Vijay

மேலும் விஜய் அறிவித்தபடி இன்னும் ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிப்பார் என்றே தோன்றுகிறது. அதனால் தளபதி70 படமும் வெளியாகும் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குவார் என்றும் தெரியவந்துள்ளது. அரசியலுக்குள் நுழைவதால் ஷங்கரின் முதல்வன் பதத்தின் 2ம் பாகம் போல முழுக்க முழுக்க அரசியல் த்ரில்லராக அந்த படம் அமையும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் இது விஜய் பக்கம் இருந்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!