25 நாட்களைக் கடக்கும் 'விக்ரம்'... மகிழ்ச்சித் திளைப்பில் கமலும் படக்குழுவினரும்..!

25 நாட்களைக் கடக்கும் விக்ரம்... மகிழ்ச்சித் திளைப்பில் கமலும் படக்குழுவினரும்..!
X
நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' 25 நாட்களைக் கடந்து 400 கோடி வசூலில் சாதனை படைத்து, மேலும், அரங்குகளை நிறைத்து தொடர்கிறது.

நடிகர் கமல்ஹாசன் சுமார் நான்கைந்து ஆண்டுகளைக் கடந்து 'விக்ரம்' இரண்டாம் பாகத்தின் மூலம் திரையில் தோன்றி அசாத்திய வெற்றியைப் பெற்று ஒட்டுமொத்த திரை நட்சத்திரங்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். கடந்த ஜூன் 3-ம் தேதி பல்வேறு மொழிகளில் உலகம் முழுதும் உள்ள திரையரங்கங்களில் வெளியான 'விக்ரம்' இப்போது 25 நாட்களைக் கடந்து வெற்றிப் பயணத்தில் வேகம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய 'விக்ரம்' திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமானத் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் வெளியாகி ஒட்டுமொத்தத் திரையுலகத்தினரிடமும் ரசிகர்களிடமும் சிறப்பான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது படம் மாபெரும் வெற்றியடைந்திருப்பதில் உற்சாகத்தின் உச்சியில் திளைத்திருக்கிறார் கமல்ஹாசன். அதோடு, 'விக்ரம்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பல வசூல் சாதனைகளையும் புரிந்து வருகிறது இன்னும் கூடுதல் கொண்டாட்டமாக இருக்கிறது. வசூலின் சாதனையாக 'விக்ரம்' வெளியாகி 25 நாட்களைக் கடக்கும் நிலையில், இப்படம் பாக்ஸ் ஆபீஸில் 400-கோடி கிளப்பில் நுழைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இன்னும் இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தில் அதிகமதிகமான திரையரங்குகளில் இப்படம் இடம்பிடித்திருக்கும் என்கிறார்கள் திரை விமர்சகர்களும் ரசிகர்களும். இந்த மகிழ்வான செய்திகளும் தொடரும் சாதனைப் பயணமும் 'விக்ரம்' படக்குழுவினரின் அடுத்தடுத்த வேலைகளின் வெற்றிக்கு வித்தாகியிருக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!