மீண்டும் சிக்கலில் நடிகர் விஜய்

மீண்டும் சிக்கலில் நடிகர் விஜய்
X

பைல் படம்

லியோ டிரெய்லரில் விஜய் பேசும் ஆபாச வார்த்தைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் படத்தில் இடைவேளைக்கு முன்னர் வில்லன் விஜய் சேதுபதியை, ஹீரோ விஜய் ஆபாச வார்த்தையில் திட்டுவார். இது சென்ஸார் செய்யப்படாமல் வெளியிடப்பட்டு இருக்கும்.

இதேபோல தற்போது லியோ படத்திலும் விஜய் பேசிய வார்த்தை விவாதப்பொருளாகி உள்ளது. அரசியல் கட்சியினர் பலர் இதுகுறித்த விமர்சனத்தை தற்போது முன்வைத்து வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வரத் திட்டமிட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வசனம் பேசும் விஜய் அரசியலுக்கு வந்தால் பெண்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்காது என விமர்சிக்கப்படுகிறது. அதே சமயம் விஜய்க்கு ஆதரவாகவும் பல சமூக வலைதளப் பதிவுகளைக் காணமுடிகிறது.

இது போன்ற ஆபாச வார்த்தையை ரஜினி நடித்த விடுதலை படத்தில் வில்லன் விஜயகுமாரை திட்டுவதற்கு பயன்படுத்துவார்(அதாவது பாஸ்டர்டு). அதற்கு தமிழ் அர்த்தத்தையும் (விஜய் பேசிய வார்த்தை) ரஜினி கூறுவார். இதைப் போல கமல்ஹாசன் நடித்த (பழைய) விக்ரம் படத்தில் தனது மனைவியைக் கொன்றவர்களை யார் அந்த... பய.. என்று இதே வார்த்தையில் திட்டுவார். அப்போதெல்லாம் இணைய தளங்கள், தொலைக்காட்சிகள் இல்லாத காலம். தியேட்டருக்குப் போகும் மக்களால் மட்டுமே அந்த கெட்ட வார்த்தையைக் கேட்க முடிந்தது. ஆனால் இன்றைய நிலைமை எப்படி என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனால்தான் விஜய் தற்போது பேசியது பெரிய விஷ(ய)மாகி விட்டது.

ஒரு கதைக்களத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நோக்கில் ஆபாச வார்த்தைகள் படக்குழுவால் திரைப்படங்களில் சேர்க்கப்படுகின்றன. இதற்கு நடிகர்கள் பொறுப்பாக முடியாது என வாதிடப்படுகிறது. எது எப்படியோ..! இந்த விவாதமே லியோ படத்துக்கு இலவச விளம்பரமாகி உள்ளதையும் மறுப்பதற்கில்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!