முதல் முறையாக தனது சகோதரனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி

முதல் முறையாக தனது சகோதரனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி
X
விஜய் டிவி தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி தனது தம்பியுடன் இருக்கும் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்

விஜய் டிவியில் இதில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும், காஃபி வித் டிடி நிகழ்ச்சி தான் மக்கள் மத்தியில் அடையாளத்தை பெற்று தந்தது. பின்னர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்

இவர் விசில் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர். தற்போது முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தனது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் டிடி, தற்போது தனது தம்பியுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.


இந்த பதிவில் தனது தம்பி சுதர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

Tags

Next Story
challenges in ai agriculture