விஜய் படத்தில் இப்படியா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

விஜய் படத்தில் இப்படியா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
X

actor vijay latest news-நடிகர் விஜய் பைல் படம்.

லோகேஷ் கனகராஜ் எடுக்க போகும் அடுத்த படத்தில் நடிகர் விஜய் மெகா ரிஸ்க் எடுக்கவுள்ளார்

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்ததார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான 'விக்ரம்' படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது. கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் வெளியான இந்தப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம்பெற்றார். இதனால் லோகேஷின் அடுத்தடுத்த படங்கள் மீது ரசிகர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 'விக்ரம்' படத்தினை தொடர்ந்து லோகேஷ் இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைகிறார். மாஸ்டர் வெற்றிக்கு பிறகு 'தளபதி 67' படத்தின் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்தப்படம் குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.

'மாஸ்டர்' படம் சில நெகடிவ் விமர்சனங்களை சந்தித்ததால் 'தளபதி 67' படம் முழுமுழுக்க தனது பாணியிலேயே இருக்கும் என லோகேஷ் தெரிவித்து வருகிறார் . மேலும் இந்தப்படத்தில் சமந்தா நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளதாகவும், படத்தில் மொத்தம் ஐந்து வில்லன்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக இந்தப்படத்தில் பாடல்களே என்ற செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக விஜய் படங்களில் பாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கும். ஆனால் 'தளபதி 67' படத்தில் பாடல்களே இடம்பெறாது என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!