vijay sethupathi who emptied the producers-தயாரிப்பாளர்களின் கையை கடிக்க வைத்த விஜய் சேதுபதி படங்கள்..!

vijay sethupathi who emptied the producers-தயாரிப்பாளர்களின் கையை கடிக்க வைத்த விஜய் சேதுபதி படங்கள்..!
X
vijay sethupathi who emptied the producers-கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் சேதுபதியின் படங்கள் தோல்வியடைந்து வருவதால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

vijay sethupathi who emptied the producers-விஜய் சேதுபதியின் வளர்ச்சி மிக வேகமானதாக இருந்தது ஒரு காலம். தற்போது அவருக்கு நேரம் சரியில்லை போலும். ஆரம்ப காலகட்டத்தில் இவருடைய படங்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால் இவரது நடிப்பில் கடைசியாக வந்த சில திரைப்படங்கள் படுதோல்வி அடைந்து இவருடைய மார்க்கெட்டை சரியாய் வைத்துள்ளது. தன்னைத் தேடி வரும் கதைகளை பரிசீலிக்காமல் எல்லா கதைகளையும் ஏற்றுக்கொண்டு நடித்ததால் பல படங்கள் அடிவாங்கியது. இவருக்கு தற்போது அடுத்தடுத்த தோல்விகள் பெரும் பிரச்னையாக மாறி இருக்கிறது.

அந்த வகையில் இந்த வருடத்தில் அவர் நடித்த படங்களில் விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படங்களைத் தவிர வேறு எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை ஓடவில்லை. அதிலும் கடந்த ஐந்து வருடங்களாக இவர் நடிப்பில் வெளிவந்த பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன.

vijay sethupathi who emptied the producers

இதன் மூலம் அந்தப் படத்தை எடுத்த தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தனர். அதிலும் சில தயாரிப்பாளர்கள் இப்போது வரை மீண்டும் வர முடியாத நிலையில் இருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த டிஎஸ்பி திரைப்படமும் வழக்கம் போல தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த படத்தை விஜய் சேதுபதி பெரிதும் நம்பியிருந்தார். ஆனால் அந்த படமும் வெற்றி பெறவில்லை. இதனால் விஜய் சேதுபதி இனி ஹீரோவாக நடிக்க முடியாது என்ற பேச்சுக்கள் இப்போது கிளம்பியுள்ளன.

உதவி மனப்பான்மை

தற்போது அவர் வில்லனாக நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் உல்ளது. அவருக்கு இனி அந்த கேரக்டர்கள் தான் செட் ஆகும் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். உண்மையில் விஜய் சேதுபதியின் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் அவருடைய உதவி செய்யும் மனப்பான்மை தான் என்று கூறுகின்றனர் அவரைப்பற்றி நன்கு தெரிந்தவர்கள். சினிமாவில் புதியவர்களை வளர்த்துவிடுவதற்காக அவருக்கு நெருக்கமானவர்கள் அல்லது தெரிந்தவர்களுக்கு நடித்துக்கொடுக்கிறார். அதனால்தான் அவருக்கு இந்த மார்க்கெட் சரிவு. அவர் திட்டமிட்டு கதைகளை தேர்வு செய்து நடித்தால், அவரது இயல்பான நடிப்புக்கு படங்கள் சிறப்பாக ஓடும். ஆனால் கதை தேர்வு செய்வதில் மட்டும் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள்.

vijay sethupathi who emptied the producers

இது உண்மையில் நல்ல விஷயம்தான். முன்னணி நடிகர்கள் யாரும் இதுபோன்று செய்வது கிடையாது. ஆனால் கதையைக் கேட்காமல் தன்னை நம்பி வந்து விட்டார்களே என்று அவர் படத்தில் நடிக்க சம்மதிப்பது தான் அவருக்கு பின்னடைவாக மாறியுள்ளது. இப்படி அவர் உதவி செய்ய போய் அது உபத்திரவமாகவே மாறி இருக்கிறது.

vijay sethupathi who emptied the producers

பழக்கத்திற்காக இவர் படங்களில் நடித்துக் கொடுத்ததால் தான் தயாரிப்பாளர்கள் இப்பொழுது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இனிமேல் அவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்றும், உதவி செய்தாலும் கொஞ்சம் கவனமாக இருங்கள் என்றும் ரசிகர்கள் அவருக்கு கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!