ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்கப்போகும் பாலிவுட் நடிகர் இவர் தானாம்

ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்கப்போகும் பாலிவுட் நடிகர் இவர் தானாம்
X
நெல்சன் திலீப்குமார் இயக்கும் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலரில் பாலிவுட் நட்சத்திரம் ஜாக்கி ஷெராஃப் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு

ஜாக்கி ஷெராஃப் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்க தயாராகிவிட்டதாகத் தெரிகிறது . நெல்சன் திலீப்குமார் இயக்கும் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலரில் பாலிவுட் நட்சத்திரம் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது,

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படமான 'ஜெயிலர்' படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நெல்சன், விஜய்யின் பீஸ்ட் படத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இதனால் இழந்த பெயரை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக ஜெயிலர் படத்திற்காக இயக்குனர் நெல்சன் கடுமையாக உழைத்து வருகிறார்.


'பீஸ்ட்' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்துடன் கைகோத்திருக்கிறார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் நாயகியாக தமன்னாவும், முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணனும் நடிக்கின்றனர். மேலும் படத்தை பான் இந்தியா முறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திரையுலகின் பல்வேறு பெரிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார்கள் என்கிற செய்தி ஏற்கனவே வெளியானது. ஏற்கனவே படத்தின் தயாரிப்புக்குழு வெளியிட்டிருந்த தகவல்களின்படி, 'ஜெயிலர்' படத்தில் கன்னட திரையுலகில் இருந்து சிவராஜ்குமார், மலையாள திரையுலகில் இருந்து மோகன்லால் மற்றும் தெலுங்கு திரையுலகில் இருந்து சுனில் போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. மேலும் 'ஜெயிலர்' படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த பிரபலம் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


இதில் பாலிவுட் நடிகருக்கான இடம் மட்டும் காலியாக இருந்த நிலையில், தற்போது அந்த இடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியாகும்பட்சத்தில், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ரஜினியின் 'ஜெயிலர்' பெறும் என தெரிகிறது.

ஆனால், ஜாக்கி ஷ்ராஃப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நெல்சனும் அவரது குழுவினரும் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்திற்காக ஜாக்கி ஷெராப்பை அணுகியுள்ளனர் என்பது உண்மைதான். இருப்பினும், இன்னும் இந்த வாய்ப்பை ஏற்கவில்லை, ஏனெனில் அவர் இன்னும் ஸ்கிரிப்டைப் படித்து, அவரது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை ஆய்வு செய்து வருகிறார் என்று கூறினார்

ரஜினிகாந்த் மற்றும் ஜாக்கி ஷெராஃப் இதற்கு முன்பு 1987-ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படமான உத்தர் தக் ஷினில் இணைந்து பணியாற்றினர். 2014-ம் ஆண்டு கோச்சடையான் என்ற போட்டோ ரியலிஸ்டிக் மோஷன் கேப்சர் படத்திலும் பணியாற்றியுள்ளனர் .


ஜெயிலரில் ஏற்கனவே மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், வசந்த் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் உள்ளனர். முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார், இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது.

Tags

Next Story