Vaathi Audio Launch-தனுஷ் ஆசிரியர் தோற்றத்தில் 'வாத்தி' படம்..! இசை வெளியாகிறது..!

Vaathi Audio Launch-தனுஷ் ஆசிரியர் தோற்றத்தில்  வாத்தி படம்..! இசை வெளியாகிறது..!
X

vaathi audio launch-வாத்தி ஆடியோ வெளியீடு (கோப்பு படம்)

தனுஷ் நடித்து வெளியாகவுள்ள வாத்தி படத்தின் இசை வெளியீட்டுவிழா குறித்து தயாரிப்பு நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Vaathi Audio Launch

தனுஷ் நடித்து வெளிவந்த நானே வருவேன் படம் தோல்வி படமாக அமைந்துவிட்டது. இந்த நிலையில், அவரது அடுத்த படத்தை வெங்கி அட்லூரி இயக்குக்கிறார். தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அந்தப் படத்துக்கு வாத்தி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தனுஷ் பாலமுருகன் என்ற கதாபாத்திரத்தில் வாத்தியாராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.


Vaathi Audio Launch

மேலும், சமுத்திரக்கனி, தனிகெல்லா பரணி, சாய்குமார், தோட்டாபல்லி மது, ஹைபர் ஆதி, ஆடுகளம் நரேன், இளவரசு, ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, ப்ரவீனா ஆகியோருடன் இன்னும் பலர் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதற்கு முன்னதாக தனுஷின் அசுரன் மற்றும் ஆடுகளம் ஆகிய படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vaathi Audio Launch

இப்படம் முதலில் 2022 டிசம்பர் 2-ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் படத்தின் பணிகள் முடிய தாமதம் ஆனதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அதன்படி இப்படம் வருகிற 2023ம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

Vaathi Audio Launch

இந்த நிலையில், வாத்தி படத்தின் இசை வெளியீடு குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. அதுவும் சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடக்க இருப்பதாக வீடியோ வெளியிட்டு சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.


Vaathi Audio Launch

தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படம் மட்டுமின்றி, அஜித் நடிக்கும் AK62, ஆர்யன், சந்திரமுகி 2, இறைவன், இருகப்பற்று, ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மாமன்னன், லைகா புரோடக்‌ஷன்ஸ் நம்பர் 18, லைகா புரோடக்‌ஷன்ஸ் நம்பர் 20, லைகா புரோடக்‌ஷன்ஸ் நம்பர் 24, ரிவால்வர் ரீட்டா, தலைக்கூதல் என்று ஏராளமான படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story