'பாகுபலி' நடிகை ரம்யா கிருஷ்ணனின் தெரியாத விஷயங்கள்..!
நடிகை ரம்யா கிருஷ்ணன்.
ரம்யா கிருஷ்ணன் 1970ம் ஆண்டு செப்டம்பர் 15,ம் தேதி சென்னையில் பிறந்தவர். துக்ளக் ஆசிரியரும், பிரபல அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி ரம்யாவுக்கு மாமா முறை ஆவார். ரம்யா கிருஷ்ணன் குச்சிப்புடி, பரதநாட்டியம் மற்றும் மேற்கத்திய நடனங்களை முறையாக கற்றவராவார். பல மேடை நிகழ்ச்சிகளையும் அவர் நடத்தியுள்ளார்.
அறிமுகம் :
ரம்யா கிருஷ்ணன் இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1984ம் ஆண்டு சினிமாவில் நடித்தபோது அவருக்கு வெறும் 13 வயதுதான். 'நேரம் புலரும்போல்' என்ற மலையாள படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் வெளிவருவது தாமதமானது. அதற்குள் 1985ம் ஆண்டில் அவர் நடித்த தமிழ் திரைப்படமான 'வெள்ளை மனசு' வெளிவந்துவிட்டது. நடிகையாக ரம்யா கிருஷ்ணனை தமிழ் ரசிகர்களே முதலில் திரையில் பார்த்தனர்.
திருமணம் :
பிரபல ஹிந்தி நடிகர் கோவிந்தாவுடன் ரம்யா கிருஷ்ணன் "படே மியான் சோட் மியான்" படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்மூலம் ஹிந்தி படத்திலும் நடித்த பெருமை பெற்றார். 2003ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி அன்று தெலுங்கு திரைப்படங்களின் இயக்குனரான கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதியருக்கு ரித்விக் என்ற மகன் உள்ளான்.
பேசப்பட்ட பாகுபலி :
அவர் நடித்து பெரிதும் பேசப்பட்ட சிவகாமி கதாபாத்திரம் முதலில் ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது. ஆனால், ஸ்ரீதேவி மிக அதிக சம்பளம் கேட்டார். அதன் பிறகு தயாரிப்பாளர்கள் ரம்யாவை அந்த கதாபாத்திரத்திற்காக அணுகினர். "பாகுபலி" சிவகாமி கதாபாத்திரம் அவரது திரையுலக வாழ்க்கையின் சிறந்த பாத்திரங்களில் ஒன்றானது. இதேபோல அவரது நீலாம்பரி கதாபாத்திரமும் அவருக்கு கிடைத்த சிறந்த பாத்திரமாகும்.
ரம்யா கிருஷ்ணன் பெற்ற பிலிம்பேர் விருதுகள்:
1999ம் ஆண்டில் "படையப்பா" (தமிழ்)(நீலாம்பரி பாத்திரம்) படத்திற்காக சிறந்த நடிகை விருது. 2009ம் ஆண்டில் "கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்" (தெலுங்கு) படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது பெற்றார். 2015ம் ஆண்டில் "பாகுபலி" (தெலுங்கு) படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதும் பெற்றார்.
நந்தி விருதுகள்:
1998ம் ஆண்டில் "காண்டே கூத்துர்னே கானு" படத்திற்காக சிறந்த நடிகை விருது, 2009 ல் "ராஜு மகாராஜு" படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது.
தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்:
1999ம் ஆண்டில் "படையப்பா" படத்திற்காக சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) என பல விருதுகளை பெற்றவர். பாகுபலி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அவர் பட்டிதொட்டியெல்லாம் பேசப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu