எம்.எம்.ஏ ஆன உதயநிதி, இப்போ 'கலகத் தலைவன்' ஆகிட்டார்..!

எம்.எம்.ஏ ஆன உதயநிதி, இப்போ கலகத் தலைவன் ஆகிட்டார்..!
X

udhayanidhi stalin new movie-கலகத்  தலைவன் பட போஸ்டர்.

udhayanidhi stalin new movie 2022-கழகத் தலைவன் இல்லீங்க.. இவர் கலகத் தலைவன். சரியா புரிஞ்சிக்கணும்.

udhayanidhi stalin new movie 2022-இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், பிக்பாஸ் ஆரவ் நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு 'கலகத் தலைவன்' என பெயரிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளரும்,நடிகரும் இப்போ எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் ரிலீசான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அருண் ராஜா காமராஜ் இயக்கியிருந்த இப்படம் பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனை படைத்தது. அதன்பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தில் நடித்தார் உதயநிதி.


இப்போ அடுத்த படம் அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அந்த படத்தை மீகாமீன், தடையறத்தாக்க, தடம் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி இருக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவ் இப்படத்தில் உதயநிதிக்கு வில்லனாம்.

ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் கரோலி ஆகியோர் இசையமைத்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

udhayanidhi stalin new movie 2022-அந்த படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் படத்தின் தலைப்பும் அறிவிக்கப்பட்டது. படத்திற்கு 'கலகத் தலைவன்' என பெயரிட்டுள்ளதாக அந்த மோஷன் போஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது. உதயநிதியின் தோற்றமும் அதில் இடம்பெற்று உள்ளது. இதைப்பார்க்கும் போது இப்படமும் த்ரில்லர் மூவியாகத்தான் இருக்கும் என தெரிகிறது.

Tags

Next Story