2022-ல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்த டாப் 10 தமிழ் படங்கள்
டாப் 10 தமிழ் படங்கள்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான படங்கள் திரைக்கு வந்தாலும் எல்லா படமும் வெற்றி அடைகிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்பது தான் நிஜம். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வந்தாலும் ஒரு சில படங்கள் மட்டும் தான் மக்களை கவர்ந்து மனதில் என்றென்றும் நிலைத்திருக்கிறது. குறிப்பாக விஜய் மற்றும் அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படம் என்றால் ரிலீசுக்கு முன்பாகவே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.
வருடம் தோறும் திரைப்படங்களுக்கு பெரிய வரவேற்பும், மார்க்கெட்டும் விரிவடைந்து வருகிறது. இதனால் தமிழ் திரைப்படங்கள் உலகம் முழுவதும் பெரிய வசூலை குவித்து வருவதை பார்த்து வருகிறோம். முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மட்டுமின்றி பல நடிகர்களின் திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு திரையில் ரிலீஸ் ஆகும் சிறிய பட்ஜெட் படம் கூட திடீரென மக்களை கவர்ந்து பெரிய அளவில் ஹிட்டாகிவிடும். குறிப்பாக லவ் டுடே திரைப் படமானது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது 100 கோடி வசூலை நெருங்கி வருவதோடு, பாசிட்டிவ் விமர்சனங்களையும் குவித்து வருகிறது.
அதன்படி தற்போது இந்தாண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் குறித்த விவரத்தை தான் பார்க்க இருக்கிறோம்.
முதலிடத்தில் பொன்னியின் செல்வன் இருக்கிறது. இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. அதன் பிறகு 400 கோடி வசூலைக் கடந்து 2-ம் இடத்தில் விக்ரம் திரைப்படமும், ரூ. 236 கோடி வசூல் புரிந்த பீஸ்ட் திரைப்படம் 3-வது இடத்திலும், ரூ. 200 கோடி வசூலித்த வலிமை திரைப்படம் 4-வது இடத்திலும், ரூ. 179 கோடி வசூலித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 5-வது இடத்திலும் இருக்கிறது.
இதனையடுத்து ரூ. 110 கோடி வசூலித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் 6-வது இடத்திலும், ரூ. 100 கோடி வசூலித்த சர்தார் திரைப்படம் 7-வது இடத்திலும், ரூ. 70 கோடிக்கும் மேல் வசூலித்த லவ் டுடே திரைப்படம் 8-வது இடத்திலும், ரூ. 60 கோடிக்கும் மேல் வசூலித்த வெந்து தணிந்தது காடு 9-வது இடத்திலும் இருக்கிறது. மேலும் ரூ. 60 கோடி வரை வசூலித்த விருமன் திரைப்படம் 10-வது இடத்தில் இருக்கிறது.
1. பொன்னியின் செல்வன் பாகம் 1
லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்த பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படம் என்கிற பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
2. விக்ரம்
கமலின் ராஜ்கமல் பிலிம் நிறுவனம் தான் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருந்த படம் விக்ரம். கடந்த ஜூன் மாதம் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்கள் பட்டியலில் விக்ரம் படம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
3. பீஸ்ட்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிபில் நெல்சன் திலீப்குமார் இயக்கி விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டன்று ரிலீசானது. இந்தப் படம் படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் குடும்பத்துடன் இப்படத்தை விரும்பி பார்த்ததால் பாக்ஸ் ஆபிஸில் ரூ.236 கோடி வசூலித்து டாப் 10 பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
4. வலிமை
போனி கபூர் தயாரிபில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம் வலிமை. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசானது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினாலும், கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸீல் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இந்த டாப் 10 பட்டியலில் 4-ம் இடத்தை பிடித்துள்ளது.
5. எதற்கும் துணிந்தவன்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் எதற்கும் துணிந்தவன்.. இப்படம் பாக்ஸ் ஆபிஸீல் ரூ.175 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தாலும், விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தது. இப்படம் டாப் 10 பட்டியலில் 5-ம் இடத்தை பிடித்துள்ளது.
6 திருச்சிற்றம்பலம்
எளிமையான கதைக்களத்துடனும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்த திருச்சிற்றம்பலம். இப்படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்க தனுஷ் நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிபில் வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.110 கோடிக்கு மேல் வசூலித்து டாப் 10 பட்டியலில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.
7 சர்தார்
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிபில் வெளியான திரைப்படம் சர்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து டாப் 10 பட்டியலில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.
8. லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருந்த படம் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் தயாரித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட வெற்றியை பெற்றதோடு இன்னும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இது டாப் 10 பட்டியலில் 8-ம் இடத்தை பிடித்துள்ளது.
9 வெந்து தணிந்தது காடு
வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிபில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி கண்டது. டாப் 10 பட்டியலில் இந்த படம் 9-வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் ரூ. 60 கோடி வரை வசூலித்த விருமன் திரைப்படம் 10-வது இடத்தில் இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu