காதலர் தினத்தில் புதுப்பொலிவுடன் திரைக்கு வரப்போகும் 'டைட்டானிக்'..!

காதலர் தினத்தில் புதுப்பொலிவுடன் திரைக்கு வரப்போகும் டைட்டானிக்..!
X
காதலர்களின் கொண்டாட்டப் படமான 'டைட்டானிக்' புதுப்பொலிவுடன் மீண்டும் தித்திப்புத் திருவிழாவாக திரைக்கு வர உள்ளது.

காதல் விருந்தாக 1997-ம் ஆண்டு உலகம் முழுதும் வெளியான படம் 'டைட்டானிக்'. பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவானது. 1912-ம் ஆண்டு டைட்டானிக் பயணிகள் சொகுசுக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. அதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் படம்தான் 'டைட்டானிக்' .

காதலர்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்த 'டைட்டானிக்' படம், மொழிகளைக் கடந்து உணர்வினில் ஒன்றியதால், உலகம் முழுவதும் பிரமாண்டை வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. அதோடு, பெருவாரியான வசூலையும் குவித்து சாதனை படைத்தது.

படத்தில் காதலர்களாக நடித்த லியார்னாடோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் இருவரும் உலகளவிலான ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழை அடைந்தனர். இதுவரை உலகில் அதிகம் வசூல் சாதனைப் படைத்த படங்கள் 'அவெஞ்சர்: எண்ட்கேம்', 'அவதார்' இரண்டு படங்கள்தான். அவற்றை அடுத்து மூன்றாம் இடத்தைப் பிடித்தது 'டைட்டானிக்'.

இந்தநிலையில், தற்போது இந்தப் படம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், இந்த அறிவிப்பை 'டைட்டானிக்' படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வெளிவரப்போகும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை புதுப்பொலிவுடன் திரையரங்குகளில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, வருகிற 2023-ம் ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14-ல் புதுப்பிக்கப்பட்ட 'டைட்டானிக்' படம் காதல் ஸ்பெஷலாக… காதலர்களுக்கு திரைவிருந்து படைக்க வெளியாகவிருக்கிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!