துணிவு படம் எப்படி இருக்கிறது? விமர்சனம்
![துணிவு படம் எப்படி இருக்கிறது? விமர்சனம் துணிவு படம் எப்படி இருக்கிறது? விமர்சனம்](https://www.nativenews.in/h-upload/2023/01/11/1641612-thunivu.webp)
அஜித் - ஹெச். வினோத் கூட்டணியில் நேர் கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு வெளியாகும் மூன்றாவது திரைப்படம் துணிவு ஆகும். விஜய் நடிப்பில் உருவான வாரிசு படத்துடன் நேரடியாக போட்டியிடுவதால், துணிவு படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணி காட்சியிடப்பட்டது. இதற்காக இரவில் இருந்தே அஜித் ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
அஜித்தின் 2011 பிளாக்பஸ்டர் திரைப்படமான மங்காத்தாவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று அவரது ஆன்டி ஹீரோ கேரக்டர். துணிவு திரைப்படம் குறிப்பாக தனியார் வங்கிகளின் கட்டணக் கொள்ளை குறித்து விவரிக்கிறது. படத்தில் அஜித் வங்கியை திட்டமிட்டு கொள்ளையடிக்கும் நபராக வருகிறார்.
வங்கிகள் கிரெடிட் கார்டு, மியுச்சுவல் ஃபண்ட், பெர்சனல் லோன் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என படத்தில் விரிவாக பேசப்பட்டுள்ளது.
துணிவு படத்தின் முதல் பிரேமிலிருந்தே, வினோத் கதையை அமைக்கத் தொடங்குகிறார், ஏனெனில் அவரிடம் சொல்ல கொஞ்சம் சிக்கலான ஒன்று உள்ளது. ஒரு கும்பல், ஒரு காவல் அதிகாரியின் உதவியுடன், ஒரு வங்கியில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய தொகையை திருட வங்கிக் கொள்ளையைத் திட்டமிடுகிறது. திட்டத்தை கடத்தும் டார்க் டெவில்ஸ் நுழைவு வரை எல்லாம் திட்டமிட்டபடியே நடக்கும். இதன் 'ஏன்' என்பது படம் முழுவதும் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது, இங்குதான் வினோத் வெற்றி பெறுகிறார்.
ஊடகங்கள், காவல்துறை, அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மீதும் வினோத்தின் விமர்சனம் நகைச்சுவையாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்கிறது. ஊழலற்ற பத்திரிக்கையாளரின் குணாதிசயமும், சமமான ஊழல் நிறைந்த போலீஸ் அதிகாரியுடன் அவர் கையாளும் விதமும் வேடிக்கையாகவும் அதே நேரத்தில் கவலையாகவும் இருக்கிறது. படத்தில் உள்ள அனைத்தும் பகல் நேரத்தில் நடக்கும், ஆனால் அவை அனைத்தும் மிகவும் இருட்டாக இருக்கும். இருட்டில் இருந்தாலும், துணிவு நம்மை பொறுமையிழக்கச் செய்யவில்லை, ஏனென்றால் ஒவ்வொரு பிரேமிலும் ஏதோ நடப்பதால் அதற்கு நேரமில்லை.
அஜித் வங்கியில் ஏன் கொள்ளையடிக்கிறார், கொள்ளையடிக்கும் போது மாட்டிக் கொண்டாரா என்பதே துணிவு படத்தின் மீதி கதை. படத்தின் இயக்குநர், வங்கிகளின் கட்டணக் கொள்ளை குறித்து சிறப்பாக விவரித்து இருக்கிறார். வங்கிகள் நமது தனிப்பட்ட தகவல்களை திரட்டி என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை துணிவு படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
அஜித் சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார். படத்தில் அஜித் ஸ்டைலாக தெரிகிறார். துணிவு படத்தை அஜித் தனது தோளில் சுமந்துள்ளார். படத்தின் இரண்டாவது பாதியில் உள்ள தொய்வை தவிர்த்து விட்டு பார்த்தால் துணிவு நன்றாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த அஜித் திரைப்படத்தில் சில காட்சிகள் இழுவையாக இருந்தது, ஆனால் துணிவு மிகச்சிறப்பாக இருக்கிறது. அஜித் ரசிகர்களை துணிவு திரைப்படம் திருப்திப்படுத்தும் வகையில் இருக்கிறது
'நேர்கொண்ட பார்வை, வலிமை' என தனது ரசிகர்களை கடந்த இரண்டு படங்களில் கொஞ்சம் ஏமாற்றியிருந்தார் அஜித். அதையெல்லாம் சேர்த்து வைத்து இந்தப் படத்தில் அவரது ரசிகர்களை முழுவதுமாகத் திருப்திப்படுத்திவிட்டார்.
அஜித் ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பது இயக்குனர் வினோத்திற்கு இந்தப் படத்தில்தான் நன்றாகப் புரிந்திருக்கிறது. காட்சிக்குக் காட்சி அஜித்தை ஆட விட்டும், அதிரடி செய்யவிட்டும், சிரிக்க விட்டும், நடக்கவிட்டும், நடிக்கவிட்டும் இந்த பொங்கல் போட்டியில் 'ஆட்ட நாயகன்' விருதை வாங்கிக் கொடுத்துவிட்டார்.
சென்னையில் உள்ள வங்கியில் இருந்து 500 கோடி ரூபாயை கொள்ளையடிக்க உதவி கமிஷனரும் சிலரும் திட்டம் தீட்டுகிறார்கள். அவர்கள் கொள்ளையடிக்கச் சென்ற அதே பேங்க்கில் சர்வதேச கேங்ஸ்டர் ஆன அஜித் சென்று அந்தக் கொள்ளையர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். அவரைப் பிடிக்க கமிஷனர் சமுத்திரக்கனி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அஜித்துடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். ஆனால், உண்மையிலேயே அந்த பேங்க்கில் கொள்ளையடிப்பது யார் என்ற உண்மையை இந்த நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் அஜித். அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தங்களது வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் எப்படியெப்படி எல்லாம் கொள்ளையடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு. மியுச்சுவல் பண்ட், மினிமம் பேலன்ஸ், கிரெடிட் கார்டு என பல விஷயங்களால் மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் என படம் பார்ப்பவர்களுக்கும் சேர்த்து கொஞ்சம் பாடம் நடத்துகிறார்கள்.
'மங்காத்தா' படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் சர்வதேச கேங்ஸ்டர் ஆக அஜித். படம் ஆரம்பமான சிறிது நேரத்திலேயே அவரது 'என்ட்ரி' அதிரடியாக ஆரம்பமாகிறது. அந்த அதிரடி அப்படியே கடைசி வரை இருப்பதுதான் படத்திற்குப் பெரிய பிளஸ். இப்படி ஒரு ஸ்டைலான அஜித்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். படம் முழுவதும் அவரது ஒன் மேன் ஷோ தான். தன் ரசிகர்கள் கொண்டாடுவதற்காகவே இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக மஞ்சு வாரியர். தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு அதிரடி ஆக்சன் படத்தில் ஹீரோயினுக்கும் இப்படி ஒரு முக்கியத்துவமா என அவரது கதாபாத்திரமும், நடிப்பும் ஆச்சரியப்பட வைக்கிறது.
நேர்மையான கமிஷனராக சமுத்திரக்கனி. கான்ஸ்டபிளாக மகாநதி சங்கர், பேங்க் மேனேஜர் ஆக ஜிஎம் சுந்தர், மெயின் வில்லனாக பேங்க் சேர்மனாக ஜான் கொகேன், டிவி நிருபராக மோகனசுந்தரம், இன்ஸ்பெக்டராக பகவதி பெருமாள். கிடைக்கும் கேப்பில் இவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
அதிரடியான சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள சுப்ரீம் சுந்தர் பாராட்டப்பட வேண்டியவர். ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு இன்னும் பரபரப்பைக் கூட்டுகிறது.
கடைசியாக, வங்கிகளில் தரும் எந்த ஒரு விண்ணப்பத்திலும் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போட வேண்டாம், பணத்திற்காகப் போராசைப்பட வேண்டாம் என ஒரு மெசேஜையும் சொல்லி முடித்திருக்கிறார்கள்.
"மக்கள் எப்பொழுதும் மகிழ்விப்பவர்களைத்தான் விரும்புகிறார்கள், தொடர்ந்து செய்திகளை வழங்குபவர்களை அல்ல" என்று ஒரு டயலாக் படத்தில் உள்ளது. ஒரு வேளை, திரைப்படங்களிலும் அது உண்மையாக இருக்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu