எளிமையான எச்.வினோத்தின் பிரமிக்க வைக்கும் மறுபக்கம்

இயக்குநர் எச். வினோத் மற்றும் இயக்குநர் மனோபாலா
துணிவு பட இயக்குநர் எச் வினோத் தனியார் சேனலுக்கு அளித்த மனம் திறந்த பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த நேர்காணலில் உரையாடிய பிரபல இயக்குநர் மனோபாலா, வினோத்தை பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
மனோபாலா கூறுகையில், வினோத்தின் முதல் படத்துக்கு தான் வாய்ப்பு கொடுத்தது பற்றி கூறுகையில், சதுரங்க வேட்டை படம் போன்ற புதிய கதைகள் தனக்கு ஆச்சர்யமாக இருந்ததாகவும், கதை கேட்ட அன்று இரவு தூக்கம் வரவில்லை என்றும் கூறினார்.
பின்னர் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற நேர்காணலில் பல்வேறு விஷயங்களை எச். வினோத் பகிர்ந்து கொண்டார்.
முதல்நாள் கலெக்சன் பற்றி வினோத் கூறுகையில், இது ஒருவித புது வியாதி, இதனை உடனே குணப்படுத்திக் கொள்வது நல்லது. இதில் கூறப்படும் நம்பர்கள் அனைத்துமே அனுமானம் தானே தவிர அது எதுவுமே உண்மை கிடையாது. பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் காரணமாக தயாரிப்பாளர்களே பொய் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என கூறினார்
ரோகினி தியேட்டரில் ஒரு ரசிகர் உயிரிழந்தது அதிர்ச்சி அளித்தது. ஒரு ஆர்வக்கோளாறினால் இவ்வாறு செய்துவிடுகிறார்கள், ஆனால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும், அந்த ரசிகரின் குடும்பம் எவ்வளவு கஷ்டப்படும் என நினைத்து பார்க்க வேண்டும். நாம் ஆறுதல் கூறலாம். பண உதவி செய்யலாம், ஆனால் இழந்த உயிரை திருப்பி தர முடியுமா? இது போன்ற விஷயங்களை நாம் ஆதரிக்கவும் கூடாது. இது போன்ற சம்பவங்கள் இனி நிகழக் கூடாது என கூறினார்
துணிவு படம் வெளிவருவதற்கு முன்பு, வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் வந்தன, ஆனால், படம் வெளிவந்த பின் பார்த்தால், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட கதையில் எதுவுமே இதில் இல்லை. இதனால் சமூக வலைத்தளங்கள் தான் பயன்பெற்றதே தவிர ரசிகர்களுக்கு படத்தை பற்றிய உண்மை தகவல் கிடைக்கவில்லை என கூறினார்
சதுரங்க வேட்டை படத்தை பற்றி கூறுகையில், நிறைய சம்பாதித்து விட்டால், நிம்மதியா வாழலாம்னு பலபேர் நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மை இல்லை, சதுரங்க வேட்டை படம் எப்படி ஏமாற்றலாம் என்பது பற்றிய படமில்லை, ஆனால், எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என தெரிவிக்கும் படம் என கூறினார்
துணிவு படத்தில் வரும் 'இது தமிழ்நாடு மிஸ்டர் ரவீந்திரன்' என்ற டயலாக் பற்றிய கேள்விக்கு, அவர் கூறியதாவது: உண்மையில் அந்த கேரக்டர் பெயர் பிரவீன். ஆனால் காஸ்ட்யூம் டிசைனர் சட்டையில் ரவீந்திரன் என பிரிண்ட் செய்து விட்டார். உண்மையில் இது வேண்டுமென்ற செய்யப்படவில்லை, காஸ்ட்யூம் டிசைனர் சட்டையில் இந்த பெயரை பொறித்ததால், ஸ்கிரிப்ட் முழுவதும் அந்த பெயரை மாற்றினோம். ஆனால் இது தெரிந்தே செய்யப்படவில்லை, யதேச்சையாக நடந்த ஒன்று என கூறினார்
தனது படிப்பு மற்றும் இதற்கு முன் பார்த்த வேலை பற்றிய கேள்விக்கு, டிப்ளமோ எலக்ட்ரிகல் முடித்துள்ளேன். மார்க்கெட்டிங் ஜாப் பண்ணிருக்கேன், பல்வேறு வேலை பாத்திருக்கேன். டீக்கடையில் வேலை பாத்திருக்கேன். கடவுள் நம்பிக்கை பத்தி நான் சொல்வதை ரசிக்கிறார்கள். நான் அப்ரூவரா மாறி உண்மை பேசுறது ஜனங்களுக்கு பிடித்திருக்குன்னு நினைக்கிறேன் என ஜாலியாக கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu