முரளியின் இரண்டாவது மகன் நடிக்கும் படப்பிடிப்பு நிறைவு

முரளியின் இரண்டாவது மகன் நடிக்கும் படப்பிடிப்பு நிறைவு
X
நடிகர் முரளியின் இரண்டாவது மகனும் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ்முரளி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி (அறிமுகம்) - அதிதி சங்கர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் கடைசியாக ஷெர்ஷா என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் தேசிய விருதையும் வென்றது.

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளியை கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர் விஷ்ணு வர்தன். காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக விருமன், மாவீரன் பட நாயகி அதிதிசங்கர் நடிக்க, சரத்குமார், பிரபுகணேசன், குஷ்புசுந்தர், கல்கி கோச்லின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும், இந்தியாவில் சென்னை, பெங்களூரிலும் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இப்படத்திற்கான தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!