ரஜினிகாந்த் ஒரு பிச்சைக்காரர் என்று தவறாக நினைக்கப்பட்டவர்..!

Actor Rajini visits temple
X

கோவிலில் அமர்ந்திருந்த ரஜினி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிச்சைக்காரர் என்று ஒரு கோவிலில் பணம் கொடுக்கப்பட்ட சம்பவம் அவர் வாழ்க்கையில் மறக்கமுடியாதது.

அவர் ஒரு சூப்பர் ஸ்டார். நிஜ வாழ்க்கையில் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கலாம். ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிஜ வாழ்க்கையில் ஒரு சாதாரண மனிதராக உட்கார்ந்து இருந்தபோது அவருக்குக் கிடைத்த 10 ரூபாய் நோட்டை மிகவும் மதிப்புடையாதாக கருதுகிறார்.

இந்த வேடிக்கையான சம்பவத்தை 'ரஜினிகாந்த்' என்ற புத்தகத்தை வெளியிட்ட கண் மருத்துவரான நூலாசிரியர் காயத்ரி ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலுக்கு எளிமையாக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிச்சைக்காரர் என்று தவறாக நினைத்து ஒரு பெண் 10 ரூபாய் கொடுத்தார். கோவிலுக்கு சென்ற ரஜினிகாந்த் தனது வழக்கமான எளிய உடையில் கோவிலில் ஒரு தூணின் அருகே சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.

முத்து சினிமாவில் ரஜினி பிச்சைக்காரர் வேடத்தில்

அப்போது ஒரு நடுத்தர வயது குஜராத்தி பெண், ரஜினிகாந்த் அருகே வந்து அவரது தோற்றத்தைப் பார்த்து இரக்கப்பட்டு, 10 ரூபாய் நோட்டை ரஜினிகாந்திடம் கொடுத்தார். திகைத்துப்போன ரஜினி, சமாளிப்புடன் அவரது திகைப்பு கலந்த ஆச்சரியங்களை மறைத்துக்கொண்டு, பணிவுடன் பணத்தை எடுத்துக்கொண்டு சன்னதிக்குள் நுழைந்தார் என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிலை விட்டு வெளியே வந்து ரஜினி தனது காரை நோக்கிச் செல்லும் போது, ​​அதே பெண் அவரைப் பார்த்து அவரிடம் மன்னிப்புக் கேட்டார். மேலும் அவரை பிச்சைக்காரராக நினைத்தது தவறு. மன்னித்துவிடுங்கள் என்று அந்த பெண் மன்றாடியுள்ளார்.

அதற்கு சூப்பர் ஸ்டார் வெறுமனே பதில் அளித்தாலும் கூட அதில் ஆயிரம் அர்த்தம் உள்ளது. அவர் இப்படி கூறினார். 'உண்மையில் என்னுடைய இடம் எங்குள்ளது என்பதை புரிய வைத்துள்ளது இந்த சம்பவம். நான் சூப்பர் ஸ்டார் இல்லை. சூப்பர் ஸ்டார் என்பது நிரந்தரம் இல்லை. எனக்கு அந்த கடவுள் நினைவூட்டுவதற்காகவே இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் என்றார் அமைதியாக. அவரது எளிமை இன்னும் பேசப்படுவதற்கு அதுவே காரணம். ரஜினிகாந்தால் மட்டுமே இவ்வளவு பணிவாக பேச முடியும்.அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

Tags

Next Story