ஜெயம் ரவி நடிக்கும் 29 ஆவது படம் இறைவன்.. முதல் பார்வை வெளியீடு...

ஜெயம் ரவி நடிக்கும் 29 ஆவது படம் இறைவன்.. முதல் பார்வை வெளியீடு...
X

ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் திரைப்பட முதல் பார்வை போஸ்டர்.

ஜெயம் ரவி நடிக்கும் 29 ஆவது படமான இறைவன் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது.

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் ஜெயம் ரவி. எடிட்டர் மோகனின் மகனும், இயக்குநர் மோகன் ராஜாவின் சகோதரருமான ரவி குழந்தை நட்சத்திரமாக சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு கடந்த 2002 ஆம் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி என அழைக்கப்பட்டு வருகிறார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ஜெயம் ரவி தனக்கென தனி பாணியை உருவாக்கி உள்ளார். ஜெயம் ரவி நடித்த உனக்கும் எனக்கும், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, பேராண்மை, பூலோகம், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.


மேலும், ஜெயம் ரவி நடித்த அடங்கமறு, தனி ஒருவன், டிக் டிக் டிக், மிருதன், கோமாளி, சகலாகலா வல்லவன், வனமகன் ஆகிய படங்களும் வெவ்வேறு கதைக்களத்தை கொண்டவை ஆகும். பொன்னியன் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஜெயம் ரவி பெயர்பெற்றார். இதுவரை 28 படங்களை நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி 29 ஆவது படமாக இறைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஜெயம் ரவி- நயன்தாரா ஜோடி நடித்த தனி ஒருவன் படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

சுதன் சுந்தரம்- ஜெயராம் ஆகியோர் இணைந்து பேஷன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கும் இறைவன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தை அகமது இயக்குகிறார். இறைவன் படத்தை இயக்கும் அகமது கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வாமணன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, என்றென்றும் புன்னகை, உதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியானது. சில காட்சிகளை பார்க்கும்போது இறைவன் படம் ஆக்சன் படமாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும், கொலை சம்பவத்தை மையக்கருவாக கொண்டு இந்த படத்தின் கதை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நயன்தாராவுக்கு முக்கியத்துவதம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

வழக்கமாக ஜெயம் ரவி தனது படங்களில் ஏதாவது ஒரு சமூக கருத்தை முன்னிறுத்தி ஆக்சன் கலந்து நடிப்பது வழக்கம். அந்த வகையில் இறைவன் படமும் சமூக கருத்தை வலியுறுத்தியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறைவன் படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இறைவன் படம் ஆகஸ்ட் மாதம் அல்லது அதற்கு முன்பே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!