விஜய்-ஐ சித்தரித்த ட்ரோல்ஸ் எப்படி இருக்குது?

விஜய்-ஐ சித்தரித்த ட்ரோல்ஸ் எப்படி இருக்குது?
X

விஜய் 

விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி தனது அரசியல் பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டார். இதை பலர் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

Thalapathy Vijay's Political Entry Troll

தற்போது விஜய் அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் GOAT(Greatest of All Time) என்ற திரைப்படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் ஜூன் மாதம் திரைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தவிர கமிட் ஆகியுள்ள திரைப்படங்களை முடித்து விட்டு தீவிர அரசியலில் இறங்கப் போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இது நிச்சயம் அவர்களின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாகத்தான் இருக்கும்.

Thalapathy Vijay's Political Entry Troll

எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த், கமலஹாசன் வரிசையில் அரசியலில் நுழைந்த உச்ச நட்சத்திரமாக தளபதி விஜய் மாறியுள்ளார். விஜய்-ன் இந்த அரசியல் பிரவேசம் மக்களிடையே பல்வேறு கேள்விகளையும், ஆர்வத்தையும் எழுப்பியுள்ளது.

சமூக ஊடகங்களில் காலை முதலே விஜய்-க்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்துக்கள் பதிவுசெய்யப்பட்டும், பரப்பப்பட்டும் வருகிறது. பல்வேறு இயக்குனர்களும், ரசிகர்களும் தங்கள் ஆதரவை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் விஜய்-ன் அரசியில் பிரவேசத்திற்கு எதிர் மனநிலையில் இருப்பவர்கள் தங்கள் எதிர்ப்பையும், கருத்துக்களையும் பரப்பி வருகிறார்கள்.

Thalapathy Vijay's Political Entry Troll

இந்த சூழ்நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் விஜய்-ன் அரசியல் கட்சி பற்றிய சில வேடிக்கையான மீம்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.










அரசியல் இல்லாமல் அங்கீகாரம் இல்லை

தனது ரசிகர் மன்றங்கள் செய்து வரும் சமூக சேவையை நினைவு கூர்ந்த விஜய், ஒரு தன்னார்வ அமைப்பால் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வர முடியாது என்றும், அரசியல் அதிகாரத்தின் மூலம் ஒரு அரசியல் கட்சியால் மட்டுமே அதை செய்ய முடியும் என்றும் கூறினார்.

"தற்போதைய அரசியல் சூழலை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நமது ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது நிர்வாக சீர்கேடுகளும் ஊழல் அரசியலும் ஒருபுறம், சாதி மற்றும் மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் அரசியல் கலாசாரம் மறுபுறம்" என்று விஜய் கூறியுள்ளார்.

Thalapathy Vijay's Political Entry Troll

அரசியல் நோக்கம்

தன்னலமற்ற, வெளிப்படையான, ஜாதி, மதம் இல்லாத, தொலைநோக்கு பார்வையற்ற, ஊழலற்ற நிர்வாகத்தை அளிக்கும் அரசியல் மாற்றத்திற்காக தமிழகத்தில் உள்ள அனைவரும் ஏங்குகின்றனர். இத்தகைய அரசியல் இந்த மண்ணின் சமத்துவக் கொள்கை, அரசியலமைப்பு மற்றும் மாநில உரிமைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். மக்களின் அன்பையும் ஆதரவையும் அனுபவிக்கும் அதிகாரத்தால் மட்டுமே இத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை சாத்தியப்படுத்த முடியும் என்ற தனது அரசியல் நோக்கத்தையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !