விஜய்க்கு ராஜயோகம் இருக்காம்ல..!? ஜோதிடர்கள் கணிப்பு..!

விஜய்க்கு ராஜயோகம் இருக்காம்ல..!? ஜோதிடர்கள் கணிப்பு..!
X

விஜய் ஜாதக அமைப்பின்படி என்ன நடக்கும் என்பதை விளக்கும் படம் 

ராஜயோகம் உள்ள ராசி உடையவர் விஜய். அதனால் அரச பதவி வரும் என்று அவரது ஜாதக கணிப்புகள் கூறுவதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

Thalapathy Vijay Politics Horoscope

நடிகர் விஜய்க்கு தற்போது ஜாதப்படி அஷ்டமத்து சனி நடக்கிறது. அஷ்டமத்து சனி காலத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் பொதுவாக யாரும் தொடங்க மாட்டார்கள். ஆனால் நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்குவதற்கான அச்சாரத்தை போட்டு விட்டார். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் களமிறங்கப்போகும் விஜய்யின் ஜாதகப்படி அவருக்கு வெற்றி வாய்ப்புக்களைத் தேடித் தருமா என்பதைப் பார்ப்போம் வாங்க.

Thalapathy Vijay Politics Horoscope

ஜாதக அமைப்பு:

நடிகர் விஜய் கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். அவரது ராசியில் சந்திரன் உடன் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலும் ஆட்சி பெற்ற சந்திரன் உடன் அமர்ந்திருப்பதால் நீச்ச பங்க ராஜயோக அமைப்பு நடிகர் விஜய்க்கு உள்ளது. எனவேதான், தைப்பூசம் நாளில் தனது கட்சியின் பெயரை முடிவு செய்திருக்கிறார் விஜய். நீச்ச பங்க ராஜ யோக அமைப்பை பெற்றவர்களுக்கு திடீர் அரசாளும் யோகம் தேடி வரும்.

அரச பதவி:

ராஜ கிரகங்களான சூரியன், சனி சேர்ந்திருப்பது அரச பதவியை தேடித்தரும். விஜய் ஜாதகத்தில் கன்னி லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் சூரியன், சனி ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்திருக்கின்றனர். ரிஷப ராசியில் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் கேது இணைந்திருப்பதும் யோகமான அமைப்பு. கலைத்துறையில் பிரபலமான நடிகராக வருவதற்கு இதுவே காரணமாக அமைந்திருக்கிறது.

Thalapathy Vijay Politics Horoscope

நடிகர் முதல் தலைவர் வரை

நடிகர் விஜய் இளைய தளபதியாக இருந்து தளபதியாக மாறி தற்போது தலைவராக மாறியிருக்கிறார். அவரது ராசி லக்னப்படி கும்ப ராசியில் சனி கோச்சாரத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். அஷ்டமத்து சனி காலத்தில் கட்சி பெயரை அறிவித்தாலும் விஜய் முழுமையான அரசியல்வாதியாக மாற இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். அதை மனதில் வைத்துதான் 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறியுள்ளார்.

வசீகரப் பேச்சு

அரசியல்வாதிகள் என்றாலே நன்றாக பேசத்தெரிந்திருக்க வேண்டும். நடிகர் விஜய் தற்போது நிறைய பேச ஆரம்பித்திருக்கிறார். மாணவர்களிடம் அரசியல் தலைவர்கள் பற்றி பேசினார். எம்ஜிஆர் பற்றி பேசி அதிமுக தொண்டர்களை தனது பக்கம் ஈர்த்து வருகிறார். இனி விஜய் பேசும் வார்த்தைகள் பலருக்கும் உதாரணமாக இருக்கும். விஜய் பேசும் வார்த்தைகளை கேட்கவே பலரும் விரும்புவார்கள் காரணம் அவரது பேச்சில் வசீகரத்தன்மை அதிகரிக்கும். இதுவே அரசியல் வளர்ச்சியின் அடித்தளம்.

Thalapathy Vijay Politics Horoscope

உற்று கவனிக்கும் மக்கள்:

விஜய் ஜாதகத்தில் 10ஆம் வீட்டில் சனியுடன் புதன் சேர்ந்திருப்பதால் நகைச்சுவையாக பேசுவார். லியோ வெற்றி விழாவில் பேசிய விஜய்.. 2026ஆம் ஆண்டு என்று கேட்டதற்கு கூட முதலில் நகைக்சுவையாக பேசி விட்டு கப்பு முக்கியம் பிகிலு என்று சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவர் சொன்னது போலவே 2026ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப்போவதை கட்சியின் தலைவராக உறுதிபடுத்தி விட்டார்.

பெண்களின் ஆதரவு

நடிகர் விஜய் ஜாதகத்தில் சந்திரன் கடக ராசியில் செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலும் நீச்ச பங்க ராஜயோகம். இவருக்கு பெண்களின் ஆதரவு, தாய்மார்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். எம்ஜிஆர் போல இவரை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். சனி பகவான் சுப வலிமையுடன் இருந்தால் தொண்டர்களின் ஆசி கிடைக்கும்.

Thalapathy Vijay Politics Horoscope

சுக்கிர திசை:

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சனி நல்ல வலிமையோடு இருப்பது அவசியம். சனி பலமாக இருப்பதால் ஜன வசியம் இருக்கும். விஜய் ஜாதகப்படி 2014ஆம் ஆண்டு முதல் சுக்கிர திசை நடைபெறுகிறது. இப்போது சுக்கிர திசை ராகு புத்தி நடந்து கொண்டிருக்கிறது. தலைவா படத்தின் போது நிறைய நெருக்கடியை சந்தித்தார் விஜய். அரசியல் ரீதியான பிரச்னைகளை சந்தித்தார்.

தடைகளைத் தாண்டி வெற்றி

விஜய் ஜாதகத்தில் சுக்கிரன் உடன் தடைகளை ஏற்படுத்தும் கேது இருக்கிறார். சுக்கிரன் வண்டி வாகனத்திற்கு ஆடம்பர வாழ்க்கைக்கு அதிபதி. நடிகர் விஜய் வாங்கிய கார் மூலம் வழக்கு வந்தது. இவருடைய பல திரைப்படங்கள் சர்ச்சைகளை சந்தித்துதான் வெற்றி கிடைத்துள்ளது. 2026ஆம் ஆண்டு இவர் அரசியலில் அடி எடுத்து வைத்தாலும் தனது இருப்பை தக்க வைக்க முடியும்.

Thalapathy Vijay Politics Horoscope

குருபகவான் பயணம்:

தற்போது கடகராசிக்கு தொழில் குருவாக பயணம் செய்கிறார். 2026ஆம் ஆண்டு சனியின் பயணம் பாக்ய சனியாக 9ஆம் வீட்டில் இருக்கும். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நேரத்திர் கடக ராசியில் ஜென்ம குருவாக பயணம் செய்வார் குரு பகவான்.

விஜய்க்கு தற்போது 49 வயதாகிறது. 2026ஆம் ஆண்டு அதாவது 52வது வயதில் இருந்து முழு அரசியலில் ஈடுபடுத்திக்கொள்வார். 2031ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்று கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.

Thalapathy Vijay Politics Horoscope

காலம் தீர்ப்பளிக்கும்

சினிமா நடிகர்களாக இருந்து அரசியலில் வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலர்தான். எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் தவிர யாராலும் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. ஆசை இருக்கு, தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு, கழுதை மேய்க்க என்று ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள்.

அரசியல் தலைவராகவோ, மக்களின் ஆசியுடன் முதல்வராகவே வருவதற்கோ ஒரு யோகம் வேண்டும். நடிகர் விஜய் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் அவரை முதல்வர் நாற்காலியில் அமர வைக்குமா என்று கிரகங்களின் பெயர்ச்சியும் காலமும் நிச்சயம் பதில் சொல்லும். அதுவரை பொறுத்திருப்போமா..?

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!