கேரள ரசிகர்களை சந்திக்கிறார் 'தமிழக வெற்றி கழகம்' தலைவர் விஜய்..!

கேரள ரசிகர்களை சந்திக்கிறார் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்..!
X
கேரளாவில் ஷூட்டிங் முடிந்தபின்னர் இன்று மாலை தமிழக வெற்றி கழக தலைவராக விஜய் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளார்

Thalapathy Vijay Fans Meet in Kerala, Thalapathy Vijay at Trivandram, Thalapathy Vijay Will Meet His Kerala Fans, Today Evening 6 PM In Greenfield Stadium Trivandrum, Thalapathy Vijay Latest News, Thalapathy Vijay Today News

14 ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய் கேரளாவில் இன்று ரசிகர்களை சந்திக்க உள்ளார். கோட் படத்திற்கான க்ளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட உள்ளது. ஷூட்டிங்கை முடிந்தபின்னர் ரசிகர்களை சந்திப்பதற்காக விஜய். திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஷூட்டிங் செல்லும்போது வழியில் அவரது காரை வழிமறித்து ரசிகர்கள் விஜய்யை திக்குமுக்காட வைத்துவிட்டனர்.

Thalapathy Vijay Fans Meet in Kerala,

நடிகர் விஜய் தற்போது தனது 68 ஆவது படத்தில் நடித்து வருகிறார். தி கிரேட்டெஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, லைலா, மைக் மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி, அஜ்மல், வைபவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

அதே சமயம் இந்த படத்தில் நடிகர் விஜய், இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் டிஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் விஜய், இளமையான தோற்றத்தில் காண்பிக்கப்பட இருக்கிறார் எனவும் தகவல்கள் ஏற்கனவே வெளியானது. அதன்படி படத்தின் படப்பிடிப்புகளும் சென்னை, ரஷ்யா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Thalapathy Vijay Fans Meet in Kerala,

இந்நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை திருவனந்தபுரத்தில் படமாக்கி வருகின்றனர். இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக கேரளா ரசிகர்களை சந்திக்க உள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. நடிகர் விஜய் காவலன் படத்திற்கு பிறகு இப்போதுதான் கேரளாவிற்கு செல்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் காவலன் படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற போது, அதாவது 2010 ஆம் ஆண்டில் கேரள ரசிகர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கேரளா வந்துள்ளார் நடிகர் விஜய். இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விஜய் நடிக்கும் காட்சிகள் இரவு நேரங்களில் நடத்தப்படும் என்று தெரிகிறது.

Thalapathy Vijay Fans Meet in Kerala,

படப்பிடிப்பு முடிந்த பிறகு திருவனந்தபுரத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளார் விஜய். தமிழ்நாட்டை போல கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதால், இச்செய்தியால் கேரள ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதன்படி இன்று மாலை 6மணிக்கு கிறீன் பீல்டு ஸ்டேடியத்தில் கேரள ரசிகர்களை சந்திக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!