தளபதி 70 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

தளபதி 70 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?
X

விஜய் (கோப்பு படம்)

விஜய்-ன் தளபதி 69 படத்தின் ஷூட்டிங்கே தொடங்காத நிலையில் தளபதி 70 படத்தைப் பற்றிய தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Thalapathy 70th Movie Confirmed or Not

விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். அதோடு விஜய் அரசியலிலும் களமிறங்க உள்ளதால், சினிமாவில் இருந்து விலக அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Thalapathy 70th Movie Confirmed or Not

சினிமாவில் இருந்து விலகும் விஜய்

விஜய்யின் 68வது படமாக உருவாகி வருகிறது GOAT என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. GOAT படப்பிடிப்பு முடிந்ததும் தளபதி 69 தொடங்கவுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் 70வது படம் குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி தளபதி 70 படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாகவும் இது பொலிட்டிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. விஜய் நடிப்பில் நண்பன் படத்தை இயக்கிய ஷங்கர் அதன்பின்னர் அவருடன் இணையவில்லை. இந்நிலையில், தற்போது தளபதி 70 படத்தில் விஜய் - ஷங்கர் கூட்டணி இணையவுள்ளதாகத் தெரிகிறது.

Thalapathy 70th Movie Confirmed or Not

மேலும் தளபதி 70 இது முதல்வன் 2ம் பாகமாக அமையும் கதையாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால் தளபதி 70 முழுக்க முழுக்க பொலிட்டிக்கல் கன்டெண்ட்டாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

விஜய்க்காக ரொம்பவே ஸ்பெஷலான கதையை ரெடி செய்துள்ளாராம் ஷங்கர். இந்தப் படத்தை DVV என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தளபதி 70 பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 70 தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன். இரு தினங்களுக்கு முன்னர் விஜய் நேற்று தனது கட்சியையும் அறிவித்துவிட்டார். தற்போது கட்சியின் நிர்வாகிகள் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Thalapathy 70th Movie Confirmed or Not

இதனால் இனி முழுக்க முழுக்க அரசியலில் பயணிக்க விஜய் முடிவு செய்துவிட்டார் என்பது தெளிவாகியுள்ளது. முக்கியமாக அடுத்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் முழுவீச்சில் அரசியலில் களமிறங்குவார் என்பதையும் அறிவித்துவிட்டார்.

இதன் காரணமாக தான் தளபதி 70 படத்துக்குப் பின்னர் கொஞ்சம் கேப் விட முடிவு செய்துள்ளாராம் விஜய். அல்லது தளபதி 70 தான் கடைசி படமாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், சினிமாவில் இருந்து அரசியலுக்கு தானே வரப் போகிறார் என மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரம் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக விஜய் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!