மனைவி பெயரில் இந்தியா முழுவதும் ஓட்டல் கட்டும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்

மனைவி பெயரில் இந்தியா முழுவதும் ஓட்டல் கட்டும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்
X

நடிகர் மகேஷ்பாபு.

தனது மனைவி பெயரில் இந்தியா முழுவதும் ஓட்டல் கட்டும் முயற்சியில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் இறங்கி உள்ளார்.

தெலுங்கு திரையுலகில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ஜுனியர் என்.டி.ஆர்., ராம்சரண்,பிரபாஸ் என்று பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். ஆனால் தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் மகேஷ்பாபு. இவருக்கு தெலுங்கில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.இவர் நடித்த பட தெலுங்கு படங்கள் தமிழில் தயார் ஆகும் போது அதில் விஜய் நடிப்பது வழக்கம். மகேஷ்பாபு நடித்த பல படங்கள் டப்பிங் செய்யப்பட்டு தமிழில் அதிக நாட்கள் ஓடி உள்ளன. இவர் படங்கள் மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும். எல்லா மொழிகளிலும் இவர் படங்கள் வசூலை குவிப்பது உண்டு.

மகேஷ் பாபு ஆகஸ்ட் 9,1975 ஆண்டு சென்னையில் சிவராம கிருஷ்ணா, இந்திரா தேவி தம்பதிக்கு பிறந்தார். இவர் தந்தை கிருஷ்ணா தெலுங்கில் பிரபல நடிகராக இருந்தார். இவரது இளைய சகோதரர் ரமேஷ் பாபு திரைப்படத் தயாரிப்பாளர்.மகேஷ்பாபு பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில் தான். இவருடைய பள்ளி பருவ நண்பர் நடிகர் கார்த்தி. மகேஷ்பாபு தனது தந்தை கிருஷ்ணாவின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தனது 25ஆவது வயதில் ராஜகுமாருடு என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இவரது ஒக்கடு தெலுங்கு படம் தான் விஜய் நடிக்க கில்லி என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. போக்கிரி படமும் அப்படி தான் தமிழ் படமாக தயார் ஆனாது. நடிப்புக்காக மகேஷ் பாபு பல விருதுகளை பெற்றுள்ளார்.இந்தி திரைப்பட நடிகை நம்ரதா ஷிரோத்கரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் தனது மனைவியின் பெருமையைப்பற்றி பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். வாழக்கையில் அனைத்தும் மனைவியின் மூலம் தெரிந்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தான் தனது மனைவி நம்ரதா பெயரில் ஓட்டல் தொழில் இறங்கி உள்ளார். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஓட்டல்கள் கட்டி தொழிலை விரிவுபடுத்தவும் திட்டமிட்டு இருக்கிறார்.

தெலுங்கில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முதல் இடத்தில் இருந்தாலும் விளம்பர படங்களில் நடிப்பதன் மூலமும் பணத்தை குவித்து வருகிறார். மற்றொருபுறம் தொழில் அதிபராகவும் வளர்ந்து வருகிறார். ஏற்கனவே ஆந்திராவில் சொந்தமாக சினிமா தியேட்டர்கள் கட்டி தொழில் செய்து வருகிறார். சொந்தமாக ஆடை நிறுவனமும் வைத்துள்ளார். தற்போது தனது மனைவி நம்ரதா பெயரில் ஓட்டல் தொழிலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் நவீன வசதிகளுடன் நட்சத்திர ஓட்டல்கள் இரண்டு கட்ட உள்ளார். அதில் ஒன்று பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைய உள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் நட்சத்திர ஓட்டல்கள் கட்டி தொழிலை விரிவுபடுத்த உள்ளார். இந்த ஓட்டல்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பை மனைவி நம்ரதாவிடம் விட்டுள்ளார். ஓட்டல் கட்டுவதற்காக சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில் இடம் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

Tags

Next Story