சுஷ்மிதா சென்னுக்கு விரைவில் திருமணம்: மாப்பிள்ளை யார்?

சுஷ்மிதா சென்னுக்கு விரைவில் திருமணம்: மாப்பிள்ளை யார்?
X
46 வயதான சுஷ்மிதா சென் விரைவில் லலித் மோடியை திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

முன்னாள் பிரபஞ்ச அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்னும் தானும் காதலிப்பதாக ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித்குமார் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சுஷ்மிதா சென்னுடன் தான் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர், சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் திரும்பிவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளை முதன்முதலில் உருவாக்கி பிரபலமானவர் லலித்குமார் மோடி. மிகப்பெரிய தொழிலதிபரான இவர், ஐபிஎல் போட்டியில் பணமோசடி மற்றும் ஊழல் புகாரில் சிக்கியதால், அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அதன்பின் அவர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டார்.

56 வயதான லலித் குமார் மோடிக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அதேசமயம் சுஷ்மிதா சென், கடந்த 2 மாதங்களுக்கு முன், தனது காதலரான ர்ஹ்மன் ஷாலுடன் தனது காதலை முறித்துக்கொண்டார்.

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தொழிலதிபரும் ஐபிஎல் நிறுவனருமான லலித் மோடியுடன் டேட்டிங் செய்து வருகிறார். பாலிவுட் திவா மீதான தனது காதலை லலித் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்தார். ட்விட்டரில் தொடர்ச்சியான கிளிக்குகளைப் பகிர்ந்து கொண்ட லலித், தான் சுஷ்மிதாவுடன் டேட்டிங் செய்வதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறினார்.


தற்போது லலித் மோடியுடன் சுஷ்மிதா சென் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுஷ்மிதா சென்-னை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் லலித் மோடி அறிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story